மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுமி...!போராடிக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு...

லால்குடி அருகே மின்சாரம் தாக்கிய சிறுமியின் உயிரை, போராடிக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுமி...!போராடிக் காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு...

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளுர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது,மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் காலை வைத்ததால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 


அப்போது அவ்வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் தீபிகாவை மீட்டு, உடனடியாக  லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுமிக்கு,மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஷாக் ட்ரீட்மெண்ட் மூலம் சுவாசம் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால்,3 முறை ஷாக் கொடுத்த பின்னரும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.


இருந்தபோதிலும்,நம்பிக்கை தளராத டாக்டர் சரவணன் தொடர்ந்து 2 முறை முயற்சித்து சிறுமியின் காப்பாற்றியுள்ளார். இதனைதொடர்ந்து மயக்கவியல் மருத்துவர் பிரபாகரன்,சிறுமிக்கு மூக்கு வழியாக நுரையீரல் ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினார்.அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு வரப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் நின்று போன இதயத்தை துடிக்க வைத்த லால்குடி அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.