திருச்சியில் ரயில் பாதையில் டயர் கிடந்த விவகாரம்; 8 பேர் கைது...!

திருச்சியில்  ரயில் பாதையில் டயர் கிடந்த விவகாரம்;  8  பேர் கைது...!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


கடந்த 2ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது.  கடந்த 2ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் - வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது  யாரோ மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே நின்ற நிலையில் ஒரு டயரையும் படுக்க வசதியில் ஒரு டயரையும் போட்டுள்ளனர். 

இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார். ஆயினும் நிறுத்தப்பட்டிருந்த டயர் ரயில் இன்ஜினில்  தட்டி தண்டவாளங்களுக்கு வெளியே வீசப்பட்டது. மற்றொரு டயர் ரயில் என்ஜினில் மாட்டியதால் இன்ஜினின் மின் ஒயர் கேபிள்கள் துண்டானதால் நான்கு பெட்டிகளின் ஃபேன் லைட்டுகள் இயங்கவில்லை. 

இதுகுறித்து ரயில் இன்ஜின் பைலட் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த சம்பவத்தில், மர்ம நபர்கள் சிலரின் செயலால் பெரும் ஆபத்து எழக்கூடிய சூழலில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  மேலும், விபத்து நடந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இதையும் படிக்க    |  மாணவர்களுக்காக பயற்சி மையத்திற்கு சொந்த வீட்டை அர்ப்பணித்த விஞ்ஞானி

இச்சம்பவம் நடந்த இடத்தில் நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விசாரணை செய்து, அதன் தொடர்ச்சியாக  இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் 2 தனி படைகளும், ரயில்வே போலீசார் சார்பில் 2 தனி படைகளும், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 1 தனிப்படையும் என மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்க, சுரங்கப்பாதை எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை தவிர்க்க சதி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த நிலையில்... நேற்று வாளாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மூன்று பேரிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில் அந்த மூன்று பேருக்கும்  இந்த சதி செயலில் தொடர்பில்லை  என தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் வைக்கப்பட்ட டயரை ஆய்வு செய்து யாருடைய டயர் என்பது விசாரணை செய்தபோது இந்த டயர் ரயில் பாதை அருகே வசிக்கும் கலையரசன் என்பவரது டயர் என்பது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து தனிப்படை போலீசார் கலையரசனை விசாரணை செய்ததில் கலையரசனுக்கு சொந்தமான லாரி டயர் பழுதடைந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாற்றி உள்ளார். அந்த டயரை அவர் வீட்டின் முன்பு வைத்துள்ளார். அதை வேற யாரோ மர்ம நபர்கள் தான் எடுத்து தண்டவாளம் நடுப்பகுதியில் வைத்துள்ளனர். 


தற்போது சம்பவம் நடைபெற்ற 4 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து செல்போன் டவரை வைத்து யார் அந்த பகுதியில் வந்துள்ளார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விசாரணையை துரிதப்படுத்தப்படும் என்றும்  மேலும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் எனவும்  போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க    | ஒடிசா ரயில் விபத்து: காரணம் இதுதான் - அதிகாரிகள் விளக்கம்...!