போலீசில் தானா வந்து மாட்டிய சில்வண்டு...கொடுத்த வாக்குமூலம் என்ன...?

போலீசில் தானா வந்து மாட்டிய சில்வண்டு...கொடுத்த வாக்குமூலம் என்ன...?
Published on
Updated on
1 min read

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் ஒருவர் போலீசாரிடம் சரணடைந்தனர். 

தனியார் வங்கியில் கொள்ளை: 

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த 13 ஆம் தேதி புகுந்த கொள்ளை கும்பல், கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. 

முக்கிய குற்றவாளி கைது:

வங்கி கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் முதற்கட்டமாக இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளியான முருகனை நேற்று தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் ஒருவர் போலீசாரிடம் சரண்:

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாக கூறியிருந்தார்இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சூர்யா வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மீதமுள்ள தங்க நகைகள் முருகனிடம் தான் உள்ளது என சூர்யா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பேரில் போலீசார் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com