நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரித்து கொண்டு வருவதால் புதிய தொழில்நுட்பமான சி.என்.ஜி கேஸ் பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் மாறி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரியில் இருந்து சேலம் வழியாக இயக்கப்படும் இரண்டு பேருந்துகளில் 8 சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட சி என் ஜி ( கம்ப்ரஸர் நேச்சுரல் கேஸ் ) மீத்தேன் வாயு மூலம் பேருந்து இயக்கப்படுகிறது. மீத்தேன் வாய்வு ஒரு கிலோ 80 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக பேருந்து இயக்கும் பொழுது ஒரு கிலோ மீத்தேன் வாயுவில் ஆறு கிலோமீட்டர் வரை பேருந்து இயக்கலாம் என்றும் ஒரு லிட்டர் டீசலில் நான்கரை கிலோமீட்டர் மட்டுமே பேருந்து இயக்க முடியும். மேலும், டீசல் விலை ஒரு லிட்டர் 95 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது. இதன் காரணமாக மீத்தேன் வாயுவால் இயக்கப்படும் பேருந்துகளில் எரிபொருள் செலவு குறைந்து வருவாய் அதிகரிப்பதால் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் மீத்தேன் மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு மாறி செல்கின்றனர்.
இந்நிலையில், டீசலில் செல்லக்கூடிய பேருந்துகளை சுமார் நான்கு முதல் ஆறு லட்ச ரூபாய் செலவில் மீத்தேன் மூலம் இயங்கும் பேருந்துகளாக சேலம் பகுதியில் மாற்றி தருகின்றனர். அதோடு, மத்திய அரசு அனுமதித்த அளவில் இப்பேருந்துகள் மாற்றியமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித கேடும் இல்லாமல் இயக்கப்படுகிறது எனவும்,
மேலும், எரிவாயு மூலம் இயக்கப்படுவதால் மாதம் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைப்பதாகவும் பேருந்துக்கான எரிபொருள் செலவு குறைவாகவும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.