எல்லை தாண்டும் அமுல் நிறுவனம்..! அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்..!

எல்லை தாண்டும் அமுல் நிறுவனம்..!    அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்..!

ஆவில் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது :-

இதனால்வரை அந்த நிறுவனம் தங்களது தயாரிப்புகளை அதனுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது, தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்யப்படும் பகுதிகளில்  அந்த நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால், அதனால்  எழும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்  கொண்டிருக்கிறார்.  

அமுல் நிறுவனத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையங்கள் நிறுவியுள்ளது குறித்தும்,  கிஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களைச்  சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல்  செய்ய திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

மேலும்,  அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்,  பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிடும் என  தெரிவித்துள்ள முதலமைச்சர், மாநிலங்களில்  செய்ல்படும் கூட்டுறவு அமைச்சகங்கள்  மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இயங்கி வருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுவதற்கும், ஊக்குவிப்பதற்கு உதவுவதாகவும், அதோடு, தன்னிச்சையான விலைஉயர்வு நுகர்வோரை  பாதிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.    

எனவே இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் இடங்களில் அமுல் நிறுவனம் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்  என  அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com