நாடார் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் நடைபெற்ற நாடார் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வெளியாட்களை வரவழைத்து தங்களை தாக்கியதாக ஒரு தரப்பினர் நீலாங்கரை காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் கடந்த ஒன்றாம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி நாடார் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டு விழா   நடைப்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி நாடார் சங்க செயலாளர், தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 18,000 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நெல்லை மற்றும் தூத்துக்குடி நாடார் சங்க உறுப்பினருமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். காலையில் இருந்து ஆண்டு விழா நடைபெற்று வந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு மேல் நெல்லை மற்றும் தூத்துக்குடி நாடார் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் அறிக்கை வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் சங்கத்தின் வரவு செலவு கணக்கு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதில் குளறுபடி உள்ளது என பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் கூச்சலிட்டு பிரச்சணையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சங்கத்தின் பணம் தவறான முறையில் செலவிடப் பட்டுள்ளது என அனைத்து உறுப்பினர்களும் கேள்வி கேட்டு கூச்சலிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அப்பொழுது கைகலப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அங்கு இருதரப்புக்கு இடையே பிரிவினை ஏற்பட்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் அப்படியே நிறுத்தப்பட்டது. 

இதில் சில கருத்துக்களால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு தரப்பு குழுவினர் செயலாளர் சந்திரசேகர், செயலாளரும், பள்ளியின் நிர்வாகியுமான பிரபு உள்ளிட்டோர் வெளியாட்களை பொதுகூட்டத்திற்க்கு வரவைத்து கேள்வி கேட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால் பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இரு தரப்பினருக்கும் சட்டைகள் கிழிந்துள்ளது.

காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிவந்த நபர்கள்கள் பொதுக்கூட்டத்தில் நுழைந்து மேடையிலிருந்து பேசியவர்களை தாக்கியதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெறமாலும் நடத்தி இருந்த நிலையில் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 01.10.2023. அன்று மாலை நடந்த பிரச்சனையை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நடிகர் பயில்வான் ரங்கநாதன் சங்க உறுப்பினர்களுடன் நீலாங்கரை காவல் நிலையம் சென்று ஆய்வாளர் மகேஷ்குமாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பேசிய சங்க உறுப்பினர்கள் செயலாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளியின் நிர்வாகி பிரபு திட்டமிட்டு அடியாட்களை வர வரவழைத்து தாக்கியதாகவும், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அவர்கள் அவர்கள் மீதும் அடியாட்களாக வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com