சவாரி வேனா... இல்ல ஆம்புலன்ஸா? நெருக்கியபடி கொரோனா மையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளிகள்!!

சவாரி வேனா... இல்ல ஆம்புலன்ஸா? நெருக்கியபடி கொரோனா மையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளிகள்!!

மதுரையில் சுமார் 50 கொரோனா நோயாளிகளை கூட்டமாக ஆம்புலன்ஸில் சிகிச்சை மையத்துக்கு அழைத்து சென்ற வீடியோ வைரலாகி பெரும் அச்சத்தை எழுப்பி வருகிறது. 

திருமங்கலம் அருகேவுள்ள பொன்னமங்களம் கிராமத்தில் அண்மையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்தநிலையில் பாதிப்புக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்ல அரசு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து கிராம மக்களே தங்களின் சுய முயற்சியில் 2 தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதில் ஒரு ஆம்புலன்ஸில் 25 பேர் என இரண்டு ஆம்புலன்ஸிலும் கூட்டம் அள்ளியது. 

அரசு ஆம்புலன்ஸ்கள் முறையாக வராததால், மக்கள் சவாரி வேன்களில் முண்டியடித்து ஏறி செல்வது போல் நோயாளிகள் கூட்டமாக ஏறி சென்றது காண்போரை பெரும் பீதியில் ஆழ்த்தியது.