வேலூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமானதால் பால் விற்பனை முகவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் 25 -க்கும் மேற்பட்ட ஆவின் பால் முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தினமும் காலை 5 ஆயிரம் லிட்டர் ஆவின் பாலும் மாலையில் 2000 லிட்டர் பாலும் விற்பனையாகி வருகிறது அதிகாலை 5 மணிக்குள் பால் வினியோகம் செய்யப்பட்டு ஆறு மணிக்குள்ளாக அனைத்து வீடுகளுக்கும் ஆவின் பால் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது வேலூரில் இருந்து வரும் பால் வாகனங்கள் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் காலதாமதமாக ஏழு மணிக்கும் எட்டு மணிக்கு வருவதாகவும் இதனால் பால் வினியோகம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அதோடு, மருத்துவமனைக்கு செல்வோர், குழந்தைகள் வைத்திருப்போர், பணிக்கு செல்வோர் இதனால் பெரும் அவதிக்குள்ளாகவதாகவும் மேலும் பால் விநியோகம் காலதாமதம் ஆவதால் ஆவின் பால் உபயோகிப்பவர்கள் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலை உருவாகிறது.
மேலும், இதனால் ஆவின் பால் விற்பனை குறைவதாகவும் உடனடியாக இதற்கு தமிழக அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், மற்றும் வேலை இல்லாமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆவினில் வேலை அளிக்க முன்வர வேண்டும் எனவும் ஆவின் முகவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.