தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி...! நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி..!

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி...! நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி..!
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
 
சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த  26 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன. 

இவற்றில் மைசூர் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை கைப்பற்றியது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை கைப்பற்றியது. மூன்றாம் இடம் பெற்ற கோழிக்கோடு பல்கலைக்கழகம் 25 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பெற்ற சென்னை  பல்கலைக்கழகம் 10 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையை வென்றன. 

இந்த போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள நேரம் கேட்டார் அமைச்சர் ரகுபதி, அப்போது இந்த துறைக்கு தான் அமைச்சராவேன் என்று நினைத்து கூட பார்க்க வில்லை. ஆனால் இப்போது இந்த துறைக்கு அமைச்சராகி உங்களுக்கு பரிசுகளை வழங்குவது பெருமையாக இருப்பதாக கூறினார். மேலும், தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com