நீலகிரியில் பூங்கா ஊழியர்கள் அரசின் கவன ஈர்ப்பு போராட்டம்...!

நீலகிரியில் பூங்கா ஊழியர்கள் அரசின் கவன ஈர்ப்பு போராட்டம்...!
Published on
Updated on
1 min read

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும்.  தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைப்பெற்று வருகிறது. உலக பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி எதிர் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. மேலும் நாளை ரோஜா பூங்காவில் 18வது ரோஜா கண்காட்சிக்கான ஆயுத்த பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தோட்டக்கலைத் துறை மற்றும் பண்ணை பூங்கா ஊழியர்களின் கோரிக்கையான தினக்கூலியாக 500 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், வாக்குறுதி அளித்து 15 நாட்களுக்கும் மேல் ஆகியும் இதனால் வரை எவ்வித நடவடிக்கையும் தோட்டக்கலைத் துறை சார்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனக் கூறி இன்று மீண்டும் தோட்டக்கலைத்துறை மற்றும் பண்ணை பூங்கா ஊழியர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை தொழிலாளர்கள் சங்கத்தினருடன், தோட்டக்கலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மலர் கண்காட்சி துவங்க ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பூங்கா ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் மலர்கண்காட்சிக்கான பணிகள் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை மற்றும் பண்ணை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிக்கு வந்த உதகை நகர காவல்த்துறை துணை கண்காணிப்பாளர் யசோதா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பூங்கா ஊழியர்களை மிரட்டும் வகையில் பேசியதையடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஊழியர்கள் தீக்குளிக்க போவதாக கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    
இதையும் படிக்க      }  அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலு...ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு போட்டி...!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com