மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு... இருவர் சஸ்பெண்ட்!!

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு... இருவர் சஸ்பெண்ட்!!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே மனநல காப்பகம் ஒன்றில் ஆய்வு நடத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன், இருவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்றிருந்தார். அப்பொழுது, அன்னவாசல் மருத்துவமனையில் திடீரென்று ஆய்வில் ஈடுபட்டார்.

அப்பொழுது தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மனநல காப்பகம் ஒன்றில், மனநலம் குன்றியவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களுக்கு முறையான படுக்கை வசதிகள் செய்து தராததும், உணவும் முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, முறையாக செயல்படாத அந்த தனியார் மனநல காப்பகத்தின் ஒப்பந்தம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்காமலும், எந்த தகவல் தெரிவிக்காமலும் இருந்த புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராமுவை பணியிடை நீக்கம் செய்தும், அன்னவாசல் தலைமை மருத்துவர் சரவணனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com