கர்ப்பிணிகள் தடுப்பூசி போட பயப்பட வேண்டாம்... மதுரை மாநகராட்சி ஆணையர்...

கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ள அச்சப்பட தேவையில்லை என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பேட்டி
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட பயப்பட வேண்டாம்... மதுரை மாநகராட்சி ஆணையர்...
Published on
Updated on
1 min read
மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை, செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மேலூர் அரசு மருத்துவமனையில் ஆகிய இடங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மதுரை அரசு இராஜாஜி தலைமையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.
பின்னர் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "முதல் கட்டமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. படிப்படியாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ள அச்சப்பட தேவையில்லை, உலக நாடுகள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது" என கூறினார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com