முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார் முதலமைச்சர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம்
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிககளில் இரண்டு நாள் (28.11.2022 மற்றும் 29.11.2022) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, திருச்சி வந்தடைந்த மு.க.ஸ்டாலின் காட்டூர், ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார் . அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை துவங்கி வைத்தார்.


தொழில் பூங்காவுக்கு அடிக்கல்

பின்பு திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு வேப்பந்தட்டை தாலுகா எறையூரில், சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை சென்ற முதலமைச்சர், அங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை திறந்துவைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின்.


அரசு நலத்திட்ட உதவி

இந்நிலையில், சுற்றுப்பயணத்தில் 2வது நாளான, இன்று அரியலூர் மாவட்டம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று காலை 9.30 மணிக்கு அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார் முதலமைச்சர்.


சென்னை திரும்பும் முதலமைச்சர்

முதலமைச்சரின் இந்த வருகையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் என  ட்ரோன்கள் பறக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு காலை 10.45 மணியளவில் கார் மூலம் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். பின்பு, சென்னைக்கு செல்லும் விமானத்தில்  மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com