முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க வந்த இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க வந்த  இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க வந்த இஸ்லாமியர்களை சந்திக்கவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை திருவாரூர், நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் நேரடியாக மனு அளிப்பதற்காக  திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை அரியலூர், ராமநாதபுரம் , மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்தும்  தஞ்சாவூர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் 500 கோடிக்கும் மேலான பொருளாதார மோசடி குறித்தும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவின் பாராட்சமான நடவடிக்கை குறித்தும் முதலமைச்சரிடம் புகார் கொடுக்க இஸ்லாமிய பெண்கள் உள்பட 1000 த்திற்கும் மேற்பட்டோர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.

அவர்களை போலீசார்  சந்திக்க விடாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள கோவில் வளாகத்தில் வைத்து அடைத்துள்ளனர் இதனால் பரப்பரப்பு நிலவியது  மேலும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஐந்து நபர்கள் முதலமைச்சரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர் அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com