மார்ச் -2ல் கன்னியாகுமரி முதல் பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் காரணம் ?

மார்ச் -2ல்  கன்னியாகுமரி முதல் பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் காரணம் ?

மார்ச் 2ல் கன்னியாகுமரி தொடங்கி மார்ச் 20ல் டெல்லி பாராளுமன்ற நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் மத்திய அரசுக்கு எதிரான பயணம் அல்ல பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற அகிம்சை வழி பயணம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

நீதி கேட்டு நெடும் பயணம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  ஏற்பாட்டில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மார்ச் 2ல் கன்னியாகுமரி தொடங்கி மார்ச் 20ல் டெல்லி பாராளுமன்ற நோக்கி நீதி கேட்டு நெடும் பயணக்குழுவில் இடம் பெற்றுள்ள பல மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிவக்குமார் காக்காஜி, எஸ்கேஎம் பல்தேவ் சிங் சிரஷா, தென்னிந்த ஒருங்கிணைப்பாளர் ராஜவிந்தர் சிங் கோல்டன், ஹரியான சுவாமி இந்தர், ஹிமாச்சல் பிரதேச ராஜ் நீஷ்சர்மா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சார்ந்த முன்னணி விவசாய சங்க தலைவர்கள் இடம் பெற்ற பயணக்குழுவினரின் முதல் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பயணக்குழு சிறப்பு பேருந்து மூலம் கன்னியாக்குமரி புறப்பட்டார்கள். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, டெல்லி பாராளுமன்ற நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் நாளை காலை கன்னியகுமரியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ துவக்கிவைக்கிறார்.

மத்திய அரசுக்கு எதிரான பயணம் அல்ல

அதனை தொடர்ந்து 2ம் தேதி கேரள மாநில முதல்வரை சந்தித்து ஆதரகேட்க உள்ளோம். 3ம் தேதி தமிழ்நாடு முதல்வரை சந்தித்து மனு அளிக்க அனுமதிகேட்டுள்ளோம். அதனை தொடர்ந்து சென்னை பத்திரியாளர் கூட்டத்தில் மேதாபட்கர் வரவேற்று கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்க, பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். இந்த பயணம் மத்திய அரசுக்கு எதிரான பயணம் அல்ல பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற அகிம்சை வழி பயணம், மாநில முதலமைச்சர்களை சந்தித்து பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமரை வலியுறுத்த வேண்டும் விவசாயிகளை பாதுகாக்கவேண்டும் என விவசாயிகள் பயணம் நடைபெறுகிறது.

விவசாயிகள் பாதிப்பு

டெல்லி போரட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்போடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதனை விலக்கப்படுவேண்டும் எனவும்,  குறைந்த பட்ச விலை நிர்ணய நிரந்த சட்டம், குழு அமைக்கப்படவேண்டும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சந்தை உத்திரவாத சட்டத்தை கொண்டுவரவேண்டும், மரபணு மாற்று விதைகளை அனுமதிக்ககூடாது இதனை வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

நிரந்தர சட்டம்

 வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும், மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கூடாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்திடவேண்டும், விளைநிலங்ளை விவசாயிகள் ஒப்புதல் இன்றி கைப்பற்ற கூடாது, டெல்லி பேராட்டகளத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை நிபந்தனையின் திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 2ல் கன்னியாகுமரி தொடங்கி மார்ச் 20ல் டெல்லி பாராளுமன்ற நோக்கி நீதி கேட்டு நெடும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com