"அதிமுக பாஜக கூட்டணி தொடரும்" நாராயணன் திருப்பதி!!

அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில்  பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு ஓவர் லக்கேஜ் அல்ல, வேஸ்ட் லக்கேஜ். அதிமுகவுடன், பாஜக கூட்டணி கிடையாது. இது என்னுடைய முடிவு அல்ல, கட்சியின் முடிவு. கட்சியின் முடிவையே நான் கூறுகிறேன். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், "தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு தான் பாதிப்பு. நோட்டாவை கூட தாண்ட முடியாது என விமர்சித்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகளை அண்ணாமலை பெறுவார்" என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வங்கியில், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "கூட்டணி தொடர்பான முடிவுகளை இருகட்சிகளின் தலைமை மட்டுமே தீர்மானிக்க முடியும். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பறை போல் திடமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com