யார் சார் சாதி பாக்குறாங்க - விசிக ஆர்ப்பாட்டம்

காசாங்கோட்டை கிராமத்தில் சாதி பெயரை சொல்லி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரியலூரில் ஆர்ப்பாட்டம்  
யார் சார் சாதி பாக்குறாங்க - விசிக ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

காசாங்கோட்டை கிராமத்தில் சாதி பெயரை சொல்லி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரியலூரில் ஆர்ப்பாட்டம்

 அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்டது காசாங்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 20.11.2022 அன்று மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சீர்வரிசை எடுத்து  சென்ற காலணி தெரு மக்களை வழிமறித்து அங்கிருந்த சிலர் சாதியை சொல்லி திட்டி தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குபதிவு செய்தும், அவர்களை கைது செய்யாததை கண்டித்து அரியலூர் அண்ணா சிலையருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விக்ரமங்கலம் காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறையை கண்டித்து கோஷமிடபட்டது.  மேலும் ஒரு சில நாட்களில் அவர்களை கைது செய்யவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை ஒன்றிணைத்து அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com