"பீஸ்ட்" புதிய சாதனை படைத்த அரபிக் குத்து பாடல்... வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்

தளபதி விஜய், பூஜா ஹெக்டேயின் அரபி குத்து பாடல் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 19 மில்லியன் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
"பீஸ்ட்"  புதிய சாதனை படைத்த அரபிக் குத்து பாடல்... வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்
Published on
Updated on
2 min read

இயக்குநர் நெல்சன் தீலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஏபரல் மாதல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கிடையில் இந்த படத்தில் இடம் பெற்ற அரபி குத்து பாடல் காதலர் தினமான நேற்று வெளியானது.. இப்பாடலை பாடகர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் வீடியோ வெள்ளிடப்பட்டது.

அதில் சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன் ஆகியோருடன் போன் காலில் தளபதி விஜய் இணைந்து ஒரு கலகலப்பான வீடியோவை உருவாக்கி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபி குத்து பாடல் வெளியான 2 மணி நேரத்திலே 1 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது... தற்போது வெளியான 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பாரவையாளர்கள் கடந்துள்ளது.. இதனை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com