விளையாட்டு மைதானம் இல்லாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு!

விளையாட்டு மைதானம் இல்லாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு!

தான் இருக்கும் பகுதியில் ஒரு விளையாட்டு மைதானம் வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மாதவரம் உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குகன் (வயது 28).  பொறியியல் படித்து முடித்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி என்ற மனைவியும் ஐந்து வயதில் மகனும் நான்கு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றார்கள்.

விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பல வெற்றிகளை பெற்று வந்த குகன் தமது பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தனது நண்பர்கள் ஆகியோருக்கு விளையாட்டு திறமைகள் அதிகம் இருந்தும்  மைதானம் இல்லை. இவர்கள்  கஞ்சா போதை போன்ற பழக்கத்திற்கு போகக்கூடாது என்பதற்காக மைதானம் வேண்டும் என  பலமுறை நண்பர்களுடன் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தற்போது வரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இதனால், கடந்த மூன்று நாட்களாக மிகுந்த மன உளைச்சளுக்கு  ஆளாகி உள்ளார். இதனால் இறப்பதற்கு முன் கடிதம் எழுதிவிட்டு. குகன்  வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இந்த விவரம் அறிந்த மாதவரம் காவல்  துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மாதவரம் காவல் துறையினர் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து குகன் எழுதி வைத்த கடிதத்தை வைத்து உறவினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:ஆட்டோ ஏறுவதில் தகராறு ;பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர்!