குருவி போய் நாய் வந்துச்சு...இப்போ நாய் போய் குருவி வந்தாச்சு...!அடுத்து என்னவோ...

குருவி போய் நாய் வந்துச்சு...இப்போ நாய் போய் குருவி வந்தாச்சு...!அடுத்து என்னவோ...

சமீபத்தில் ட்விட்டரின் லோகோவான நீல நிற குருவியை மாற்றிய உரிமையாளர் எலான் மஸ்க், மீண்டும் பழைய லோகோவையே மாற்றியுள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். ட்விட்டரை வாங்கியது முதலே ட்விட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களையும், நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க், சமீபத்தில் திடீரென ட்விட்டர் செயலியின் லோகோவை மாற்றம் செய்தார்.

இதையும் படிக்க : ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!

அதன்படி, நீண்ட நாள் ட்விட்டரின் லோகோவாக இருந்த நீல நிற குருவியை மாற்றி, மஞ்சள் நிற நாயை லோகோவாக மாற்றினார். பின்னர் இதுகுறித்து மீம்ஸ் மூலம் விளக்கமளித்த எலான் மஸ்க், டாஜிகாயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், ட்விட்டர் தளத்தில் திடீரென லோகோ மாற்றம் செய்யப்பட்டது ட்விட்டர் பயனாளிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

மேலும், இந்த ட்விட்டர் லோகோ குறித்து  தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் நாயை தூக்கிவிட்டு மீண்டும் பழைய லோகோவான நீல நிற குருவியையே மாற்றம் செய்துள்ளார். இவரின் திடீர் திடீர் நடவடிக்கைகள் ட்விட்டர் பயனாளிகளை சற்று பதற்றமடைய செய்வது என்னமோ உண்மைதான்...