பார்ப்பதற்கே ஹெலிகாப்டர் போன்ற தோற்றம்...15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியேற்றம்...இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

பார்ப்பதற்கே ஹெலிகாப்டர் போன்ற தோற்றம்...15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியேற்றம்...இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
Published on
Updated on
1 min read

கோத்தகிரி வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவாச்சி பறவைகள் தென்படுவதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இருவாட்சி பறவைகள்:

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை சூழலில் பறவைகள் வாழ்ந்து வருகிறது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத , பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய HORNBILL என கூறப்படும் இருவாட்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறது.

குறைந்த பறவைகளின் எண்ணிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் இந்த இருவாச்சி பறவைகளின் எண்ணிக்கையானது, அண்மைக் காலமாக  குறைந்து காணப்பட்டுள்ளது. இதனால் பறவை ஆர்வலர்கள் சற்று கவலை அடைந்தனர்.

மீண்டும் அதிகரித்த பறவைகள்:

இந்நிலையில், தற்போது கீழ்கோத்தகிரி, கரிக்கையூர் வனப்பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாட்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, பசுமை நிறைந்த கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாட்சி பறவைகள் அப்பகுதியில் குடியேறி கூண்டுகள் கட்டியுள்ளதால், இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புகைப்படம் எடுக்க ஆர்வம்:

பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போன்று காட்சி அளிக்கும் இருவாட்சி பறவைகள் தற்போது கீழ் கோத்தகிரி வனப்பகுதியில் தென்படுவதால் பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com