தாயை மணக்கோலத்தில் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.. வைரலாகும் வீடியோ!!

தன் தாயை மணக்கோலத்தில் பார்த்த மகனின் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாயை மணக்கோலத்தில் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.. வைரலாகும் வீடியோ!!
Published on
Updated on
1 min read

திருமணத்துக்கு முன்பான உறவு என்பது மேலை நாடுகளில் சகஜமான ஒன்று. காதலர்களான மிஹெலிச் மற்றும் பாபி ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் மிஹெலிச் தாய்மை அடைந்தார்.

ஆனால் கொரோனா நெருக்கடியால் உலகமே முடங்க திருமணம் என்னும் பந்தத்தில் இணைய முடியாமல் போகிறது. இதனால் குழந்தைக்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என அவர்கள் முடிவெடுக்க தற்போது தான் தருணம் கூடி வந்துள்ளது.

அதன்படி  மிஹெலிச் மற்றும் பாபி ஆகியோர் முறைப்படி திருமண பந்தத்தில் இணைய, மணக்கோலத்தில் தன் தாய் வருவதை பார்த்த 2 வயது மகன் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் தாயை ஆரத்தழுகிறான். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com