தாய் சொல்லை மீறாத பிள்ளை...வேடிக்கையான குட்டி யானையின் வீடியோ வைரல்...!

தாய் சொல்லை மீறாத பிள்ளை...வேடிக்கையான குட்டி யானையின் வீடியோ வைரல்...!

தாய் யானை பின்பற்றி மண் சரிவில் இறங்கும் குட்டியானையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பாடம் எடுக்கும் யானை:

மண் மேடான பகுதியில் இருந்து எப்படி இலாவகமாக இறங்குவது என்று தன் குட்டிக்கு தாய் யானை அழகாக சொல்லி தரும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சரிவான மண் பகுதியின் மேல் நின்றுக்கொண்டு பின்னங்கால்களை மண் மேல் வைத்துக்கொண்டு எவ்வாறு இறங்க வேண்டும் என தாய் யானை பாடம் எடுக்கிறது.

தாயை பின்பற்றும் பிள்ளை:

தாய் யானையை பின்பற்றி, அதேபோன்று கால்களை பின்னால் வைத்துக்கொண்டு சரிவில் இறங்க முயற்சிக்கும் குட்டி யானை, எதிர்பாராத விதமாக உருண்டு கீழே விழுகிறது. 

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/tamilnadu/Is-it-illegal-for-the-government-to-appoint-a-university-vice-chancellor

வைரலாகும் வீடியோ:

குட்டி யானை என்றாலே அதன் சுட்டி தனமான செயல்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோன்று தன் தாயின் பாடத்தை அப்படியே செய்யும் இந்த குட்டி யானையின் வேடிக்கையான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.