படிச்சு என்ன கிழிச்ச? -னு யாருமே கேட்ககூடாது பா..! படிச்ச புத்தகத்தையே கிழிச்சுருவோம்....! - குஷியான மாணவர்கள்.

படிச்சு என்ன கிழிச்ச? -னு யாருமே கேட்ககூடாது பா..!  படிச்ச புத்தகத்தையே  கிழிச்சுருவோம்....! - குஷியான மாணவர்கள்.
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் மற்றும் மாடரஅள்ளி பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இன்று முழு ஆண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது இந்த ஆண்டின் பள்ளி கடைசி நாள் என்பதால்  தாங்கள் ஆண்டு முழுவதும் படித்த புத்தகங்களை துண்டு துண்டுகளாக கிழித்து பட்டம் விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். 

ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் சூழ்நிலை அறிந்து இலவசமாக பாடநூல் வழங்கியதால் என்னமோ இந்த புத்தகங்களின் மதிப்பு தெரியாமல் இலவச பாட நூல்களை பஞ்சு பஞ்சாக கிழித்து பட்டம் விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். 

அதேபோல் கேக்கு துண்டுகளை தங்களது முகங்களில் மாறி மாறி தேய்த்தும்  இவர்கள் செய்த அளப்பரைக்கு அளவே இல்லாமல் போனது. மேலும் இவர்கள் கிழித்து சாலையெங்கும் வீசி சென்ற புத்தகங்கள் சாலையெங்கும் வெள்ளை கொப்புளங்கள் போல் கருஞ்சாலையின் மேலே மிணிந்து கொண்டிருந்தன.

இவர்கள் அறியாமையால் செய்தார்கள் என்றாலும் கூட இவர்கள் கற்பித்த ஆசிரியர்கள் வழி நடத்தல்கள் சரியாக இல்லாத காரணமே இது போன்ற மாணவர்கள் புத்தகங்களை கிழித்து சாலை எங்கும் வீசி சென்றது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கே செல்கின்றது மாணவ சமூகம் படிக்கும் காலங்களில் இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது இவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது மாணவர்களுக்கு சரியாக சிறப்பான கல்வியும் ஒழுக்கமான சூழலும் உருவாக்கி தர வேண்டுமென கோரிக்கையை எடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com