கொரோனா வந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்,..ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி முடிவுகள்.! 

கொரோனா வந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்,..ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி முடிவுகள்.! 

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

கொரோனாவால் உலகமே முடங்கிப்போய் கிடந்து இப்போது தான் அதிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறது. கொரோனாவே சரியானால் கூட அதன் பின்விளைவுகள் மக்களை தொடர்ச்சியாக பயமுறுத்திவருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமானாலும் அவர்களை கருப்பு,வெள்ளை,மஞ்சள், பச்சை பூஞ்சை தொற்றுகள் தாக்கின. இது உயிரிழப்பு வரை சென்றது.

ஆனால் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ஆண்மை குறைபாடும் ஏற்படும் என்று சில ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. இப்போது வெளிவந்துள்ள சில தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தி விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகளை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்மை குறைபாட்டுக்கு கொரோனா வைரஸ் மட்டுமே காரணம் இல்லை என்றும், கொரோனா வந்தவர்களுக்கு ஏற்படும் மனசோர்வு, மனநிலை பாதிப்புகளாலும் இந்த பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளிவந்துள்ள இந்த தகவல் பொதுமக்களிடையே குறிப்பாக ஆண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.