"பூனைக்குட்டி வெளியே வந்தது ...!"  - அமைச்சர் ஜெயக்குமார்.

"பூனைக்குட்டி வெளியே வந்தது ...!" - அமைச்சர் ஜெயக்குமார்.

Published on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வமும் , சபரீசனும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியை அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டு ரசித்தனர். இந்நிலையில் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனும் சந்திந்து பேசும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் வெளியாகியது. 

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், " பூனைக்குட்டி வெளியே வந்தது " என கூறி ஓபிஎஸ் மற்றும் சபரீசன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com