5 லட்ச விமான டிக்கெட்டுகள் “ஃப்ரீ”... எல்லாரும் வாங்க ஹாங்காங் போலாம்....

ஹாங்காங்கின் சுற்றுலா பயணிகள் அளவு குறைந்ததை அடுத்து, தற்போது லட்சக்கணக்கில் இலவச டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது.

5 லட்ச விமான டிக்கெட்டுகள் “ஃப்ரீ”... எல்லாரும் வாங்க ஹாங்காங் போலாம்....

ஹாங்காங்: கொரோனா தொற்று பரவல் காரணமாக பல வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், பல சுற்றுலா தளங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக உலக மக்கள் பலர் செல்லும் மிகப்பெரிய சுற்றுலா தளமான ஹாங்காங்கிற்கு, யாருமே செல்லாத நிலையில், பல கோடி சுற்றுல அபயணிகளை இழந்தது ஹாங்காங்க்.

இந்நிலையில், இழந்த கணக்கை மீண்டும் சரிக்கட்ட, தற்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது ஹாங்காங் அரசு. சுமார் 5,00,000 (ஐந்து லட்சம்) சுற்றுலா பயணிகளுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டு, அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

மேலும் படிக்க | இனி செல்லபிராணிகளுடனே விமானத்தில் பயணிக்கலாம்...

Hong Kong Offers 500,000 Free Air Tickets

சுமார் 254.8 மில்லியன் டாலர்கள், அதாவது, 21, 04, 71, 17, 000 இந்திய ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகளை இலவசமாகவே கொடுக்கிறதாம் அரசு. ஆனாலும் முக்கிய விமான நிறுவனங்கள் இன்னும் சேவையைத் தொடங்கவில்லை.

இந்த நிலையில்தான் இலவச விமான டிக்கெட் திட்டத்தை ஹாங்காங் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.  விமான நிறுவனங்களுடன் பேசி இதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் பாரம்பரியம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது... இந்தியாவில் விவசாயம் செய்யும் நோக்குடன் அமெரிக்க தம்பதிகள் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம்

--- பூஜா ராமகிருஷ்ணன்

Dream Come True? Hong Kong To Give 5,00,000 Free Air Tickets To Attract  Tourists