எங்களது வைரத்தைத் திருப்பிக் கொடுங்கள்- ஆப்ரிக்காவின் கோரிக்கையால் பதற்றம்!

தென்னாப்ரிக்காவில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் முகப்பெரிய சுத்தமாக வெட்டப்பட்ட வைரத்தை இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்திலும், செங்கோலிலும் உள்ள வைரக் கற்களை திருப்பி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

எங்களது வைரத்தைத் திருப்பிக் கொடுங்கள்- ஆப்ரிக்காவின் கோரிக்கையால் பதற்றம்!

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் இருக்கும், உலகின் மிகப்பெரிய சுத்தமாக வெட்டப்பட்ட வைரம் தங்களுக்கு மீண்டும் வேண்டும் என தென்னாப்ரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. தங்கள் நாடு வறுமையில் வாடும் போது அந்த வைரம் தங்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க | பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல்..!

இங்கிலாந்து மகாராணியாக சுமார் 80 வருடங்களுக்கு ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் பிரிடிஷ் மட்டுமின்றி, உலகின் மற்ற பல இடங்களில் மகாராணியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். அந்நாடுகளின் சட்ட திட்டங்களில் பெரிய ஆதிக்கம் செலுத்த முடியாது என்றாலும், அவருக்கு, அங்கு அனைத்து வகையான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும், மகாராணியே முன்னணி வகிப்பார்.

மேலும் படிக்க | மகாராணி சவப்பெட்டி மீது வீசிய சூரிய கதிர்!!! நெகிழ வைத்த சம்பவம்!!!

அவ்வகையில், தென்னாப்ரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட, உலகின் மிகப்பெரிய சுத்தமாக வெட்டப்பட்ட வைரம் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தில் இருக்கிறது. அதனை தற்போது தென்னாப்ரிக்கா மீண்டும் தர சொல்லி கோரிக்கை முன்வைத்துள்ளது.

கடந்த வாரம் மகாராணி மறைவைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல வகையான அதிர்வலைகள் கிளம்பி வருகின்றன. அதில், இந்த அதிர்வலை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆப்ப்ரிக்காவின் கிரேட் ஸ்டார் அதாவது கல்லினன் எல், என அறியப்படும், மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் மிகப்பெரிய வைரக் கல், தங்களுடையதாக நம்பும் தென்னாப்ரிக்கா, தற்போது அதனை திருப்பிக் கொடும்படியாகக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த அழைப்புகள் தென்னாப்ரிக்காவில் இருந்து ஒரு வார காலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் “ரகசிய” கடிதமா? அதை திறக்க...

இங்கிலாந்து அரசாட்சியின், செங்கோலில் உள்ள இந்த பெரிய வைரம், 1905ம் ஆண்டில், தென்னாப்ரிக்காவில் வெட்டப்பட்டு, அரச குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆப்ரிக்கா இங்கிலாந்து காலனியாக இருந்தது.

Does Queen Elizabeth watch The Crown?

ஆனால், மகாராணி மீதான மரியாதை காரணமாகவும், பல ஒப்பந்தங்கள் காரணமாகவும், அமைதி காத்து வந்தனர். ஆனால், சமீபத்தில் மகாராணி இறந்த செய்தி தெரியவந்ததால், தென்னாப்பிரிக்காவில், தங்களது வைரத்தை மீண்டும் தருமாறு கோரிக்கைகள் வரத் துவங்கியுள்ளன.

மேலும் படிக்க | இது தான் ஆரம்பம்!!! இன்னும் என்னன்ன நடக்க போகுதோ?

ஏற்கனவே, ஆப்பிரிக்காவின் கிரேட் ஸ்டார் மற்றும் நாட்டில் வெட்டப்பட்ட மற்ற விலைமதிப்பற்ற கற்கள் யாருடையது என்பது குறித்து ஊடகங்களில் ஏராளமான விவாதங்கள் நிரம்பியுள்ளன.

மேலும் படிக்க | நிறமிழந்த கூகுள் லோகோ!!! இது தான் காரணமா?

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் உறவுகளைத் துண்டித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பும் ஆப்பிரிக்க உருமாற்ற இயக்கத்தின் (ATM) MP Vuyo Zungula இன் கருத்துக்கள் மிகவும் தீவிரமானதாக இர்உக்கிறது. மேலும், இவ்ரது கருத்து, உலக மக்கள் மத்தியில் இங்கிலாந்து அரசாட்சிக்கு எதிரான கிளர்ச்சியைக் கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | நாடு முழுவதும் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி.. மகாராணிக்கு மரியாதை செலுத்தும் இந்தியா..!

“தென்னாப்ரிக்கா, தற்போது காமன்வெல்த்தை விட்டு வெளியேற வேண்டும், பிரிட்டன் செய்த அனைத்து தீங்குகளுக்கும் இழப்பீடு கோர வேண்டும், பிரிட்டிஷ் மேக்னா கார்ட்டா அல்ல, தென்னாப்ரிக்கா மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும், மேலும் பிரிட்டனால் திருடப்பட்ட தங்கம், வைரங்கள் அனைத்தையும் திரும்பக் கோர வேண்டும்.” என்று அவர் கூறினார்.

Queen Elizabeth II, Britain's longest-reigning monarch, dies aged 96 |  Queen Elizabeth II | The Guardian

மேலும், முன்னாள் ANC குவாசுலு-நடால் மாகாண செயலாளர் தந்தக்சோலோ சபேலோ, “நமது நாடு மற்றும் பிற நாடுகளின் கனிமங்கள், நமது மக்களின் இழப்புகள் பிரிட்டனுக்கு தொடர்ந்து பயனளிக்கின்றன. நாங்கள் ஆழ்ந்த, வெட்கக்கேடான வறுமையில் இருக்கிறோம், அவரும் (இரண்டாம் எலிசபெத்) அவரது முன்னோர்களும் ஏற்படுத்திய அடக்குமுறை மற்றும் பேரழிவின் காரணமாக நாங்கள் வெகுஜன வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் குற்றங்களின் நிலைகளுக்கு ஆளாகி இருக்கிறோம்.” எனக் கூறினார்.

மேலும் படிக்க | மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு.. பர்மிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு..!

இந்த கோரிக்கை குறித்து மேலும் பேசிய அவர், தற்போது, மூன்றாம் சார்லஸ் அரசர் பதவியை ஏற்க போகும் நிலையில், செங்கோல் மீண்டும் அமலுக்கு வருவதால், “குல்லினன் வைரம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தென்னாப்ரிக்காவுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும்.” என கூறினார்.

மேலும் படிக்க | சார்லஸ் இவ்வளவு மோசமானவரா? இதில் தற்போது ராஜ மகுடம் வேற!!!

இந்த கோரிக்கைக்கு, இது வரை 6,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்து போட்டுள்ளது. ராணியின் மரணத்தைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா தனது இரங்கலைத் தெரிவித்தார், ஆனால் அதற்குப் பதிலாக வைரத்தை திருப்பித் தருமாறு அவர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர். இச்செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இன்று முதல் இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடும் அரசர் சார்லஸ்!!!