இலங்கை அரசு விதித்த அதிரடி தடை...அதிர்ச்சியில் இலங்கை மக்கள்...!

இலங்கை அரசு விதித்த அதிரடி தடை...அதிர்ச்சியில் இலங்கை மக்கள்...!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வுப் பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடி:

சமீப காலமாகவே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, எரிப்பொருள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதன் எதிரொலியாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

போராட்டத்தின் எதிரொலி:

இந்த போராட்டம் மிகப்பெரிய திரளான போராட்டமாக மாறி, இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைகளை முற்றுகையிட்டு சூறையாடினர். அதன் பின் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகி நாட்டை விட்டு தப்பித்து சென்றனர். இதற்கு பிறகு ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபரானார். 

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/Plan-to-hike-transport-service-charges--OPS-condemns

உதவியை நாடும் இலங்கை:

தொடர்ந்து, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை அரசு நாடி வருகிறது. அதே சமயம் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இறக்குமதி பொருட்களுக்கு தடை:

இந்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வுப் பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. அதன்படி,

  1.  சாக்லேட்,
  2.  பால் பொருட்கள்,
  3.  அழகுசாதனப் பொருட்கள்,
  4.  நகைப்பெட்டிகள்,
  5.  கழிவறைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  6.  வாசனைத் திரவியங்களுக்கும்
  7.  குறிப்பிட்ட வகை கட்டுமானப் பொருட்களுக்கும்
  8.  குளிர்சாதனப் பெட்டி,
  9.  குளிர்விப்பான் உள்ளிட்ட பொருட்களுக்கும் இலங்கை அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்டு செப்டம்பர் 14-ந்தேதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.