
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பொருளாதார நெருக்கடி
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர்.
மாணவர் - இளைஞர் போராட்டம்
ராஜபக்ச சகோதரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவோடு தற்போது இலங்கையின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் போராடி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஜெனிவாவிலும் போராட்டம்
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் அடக்குமுறையை நிறுத்தமாறு போரட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு கோரி ஜெனிவாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர் . ஜெனிவாவில் மனித உரிமை ஆணைய கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.