"புத்தர் சிலைக்குள் இருந்த எலும்புக்கூடு" CT ஸ்கேனால் விலகிய மர்மம்! மறைக்கப்பட்ட மனித உடல்.. கைமாறியது எப்படி?

இந்த சிலையானது 1,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிலை ஆகும்.
1000-year-old Buddha statue
1000-year-old Buddha statue
Published on
Updated on
2 min read

ஒருநாள் நீங்கள் ஒரு பழமையான புத்த சிலை ஒன்றை வாங்குகிறீர்கள். ஆனால், அதில் ஒரு புத்தரின் உடல் இருந்ததை, அதாவது 'மம்மி' போன்று ஒன்றிணைத்தான் நீங்கள் வாங்கி வந்துள்ளீர்கள் என்றால்..?. இது நடக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் இது நடந்துள்ளது.

நெதர்லாந்தில் உள்ள ஒரு சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்ட அமர்ந்த நிலையிலான புத்தர் சிலை, ஒரு அசாதாரணமான இரகசியத்தை கொண்டிருந்துள்ளது. அதுவே பின்னாளில் உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சிலையானது 1,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிலை ஆகும். இந்த சிலையை வாங்கிய ஒருவர் அதை புனரமைப்பதற்காக ஒரு நிபுணரிடம் கொண்டு சென்றுள்ளார். அப்போது, ​​சிலையின் உள்ளே இருந்த ஒரு குழிக்குள் அந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை சீனாவிலிருந்து எப்போது, ​​எப்படி அகற்றப்பட்டது? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக்கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று, அந்த புத்த சிலையினை சிடி ஸ்கேன் செய்தபோதுதான், அந்த மம்மியின் உறுப்புகள் காணாமல் போயிருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் நுரையீரல் திசு என்ற நினைத்தது சீன எழுத்துக்கள் எழுதப்பட்ட சிறிய காகிதத் துண்டுகள் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மம்மியை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள ‘சுய-மம்மியாக்கம்’ அதாவது தாமாக மம்மியாக மாறியிருக்கக்கூடும் என்று பௌத்தத் துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மம்மி ஒரு காலத்தில் மதிக்கப்பட்ட ஒரு பௌத்த துறவியாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த துறவி இறந்த பிறகு, ஒரு ஞானியாக வணங்கப்பட்டிருக்கலாம் என்று நெதர்லாந்தில் உள்ள 'டிரென்ட்ஸ்' அருங்காட்சியகத்தின் தொல்லியல் காப்பாளரான வின்சென்ட் வான் வில்ஸ்டெரென் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வாளர்கள், சீனாவில் அந்த மம்மி இருந்த சரியான இடத்தைக் கண்டறியும் நம்பிக்கையில், ஆராய்ச்சியாளர்கள் இன்னும் டிஎன்ஏ பகுப்பாய்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த சிலையை ஆய்வு செய்ததில் அந்த மம்மி 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்றும், அதே சமயம் அந்தக் கம்பளம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

பொதுவாக துறவிகள் 'சுய மம்மி'யாக மாற நினைப்பவர்கள் அரிசி, கோதுமை மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட எந்த உணவையும் உணவில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றும், அதற்குப் பதிலாக கொட்டைகள், பெர்ரி பழங்கள், மரப்பட்டைகள் மற்றும் பைன் ஊசிகளையே உணவாக எடுத்துக்கொண்டனர் என்று கூறப்படுகிறது. இது, சடலங்கள் அழுகுவதற்குக் காரணமான உடல் கொழுப்பு மற்றும் ஈரப்பதத்தைக் குறைப்பதற்கு உதவியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்காக மூலிகைகள், கொட்டைகள் மற்றும் எள் விதைகளையும் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகக் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, பின்னர் ஒரு நிலத்தடி அறை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், ஒரு மூங்கில் குழாய் ஒன்றின் வழியாக சுவாசித்தபடி, அந்தத் துறவி பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். தான் உயிருடன் இருப்பதை உணர்த்தும் விதமாக, ஒவ்வொரு நாளும் அவர் கல்லறைக்குள் இருந்த மணியை அடித்துவந்துள்ளார். அந்த மணி ஓசைகள் இறுதியாக ஓய்ந்ததும், காற்றுக் குழாய் அகற்றப்பட்டு, கல்லறை மூடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சீடர்கள் கல்லறையைத் திறந்து அவரது உடலை பதப்படுத்தி வழிபடுவதற்காக அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

உலக வரலாற்றிலேயே புத்தர் சிலைக்குள் 'மம்மி' கண்டறியப்பட்ட ஒரே ஒரு அரிய நிகழ்வு இதுமட்டுமே என்று கூறப்படுவதோடு அந்த துறவி பெயர் 'லியுகுவான் மம்மி' என்றும் கூறப்படுகிறது. இந்த தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட புத்த சிலைக்கு பின்னால் ஒரு வரலாற்று மர்மத்தையே சுமந்து நிற்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com