
சென்னை கோயம்பேடு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, கோயம்பேடு மார்க்கெட் என்று தான் சொல்ல வேண்டும். தினம் தோறும் சில்லறை வியாபாரிகள் மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கோயம்பேடு சந்தைக்கு வந்து செல்கின்றனர். காய்கறிகள், பழங்கள், பூக்கள் என தனித்தனியாக ஒரு சிறிய கிராமமே கோயம்பேடு சந்தையில் இருக்கிறது என்று சொல்லலாம்.
தமிழகத்தில் இருக்கும் அனைவரும் நேரில் இல்லையென்றாலும், கோலிசோடா, வானம் கொட்டட்டும் போன்ற சில திரைப்படங்கள் மூலமாகவாவது ஒரு முறையேனும் கோயம்பேடு சந்தையை பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் சென்னை மற்றும் சென்னையின் சுற்று வட்டாரத்தில் உள்ள காய்கறி, பழங்கள் மற்றும் பூ வியாபாரிகளுக்கு கோயம்பேடு பழகிப்போன ஒரு இடமாகவே உள்ளது.
இப்படி பட்ட கோயம்பேடு மார்க்கெட் பலருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அதிலும் தன் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் சிலருக்கு கோயம்பேடு மார்க்கெட் ஒரு கடவுளாக இருந்து தேவையானதை கொடுத்திருக்கிறது.
இது போல உழைப்பை மட்டுமே நம்பி தனி ஒரு பெண்மணியாக கோயம்பேடு மார்க்கெட்டில் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் உழைக்கும் சில பெண்களை சந்தித்து பேசியதில் பருவம்மா, சாவித்திரி, அம்மு மற்றும் முத்து மாரி ஆகிய நான்கு பேரும் அவர்களுக்கும் இந்த மார்கெட்டிற்கு இருக்கும் உறவை பற்றி நம்மிடம் கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கும் இந்த மார்க்கெட்டிற்குமான உறவு என்ன என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் தெளிவாக காண்போம்.
தெய்வமான மார்க்கெட்
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் பருவம்மா, 2011 ல் தொடங்கி இன்று வரை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கும் நிலையில் நான்கு பேரையும் இவர் இந்த கடை நடத்தி தான் வளர்த்துள்ளார்.
இந்த கோயம்பேடு மார்க்கெட்டை இவர் தெய்வமாக கருதுகிறார். ஒரு நாள் மார்க்கெட்டில் கடை போடவில்லை என்றாலும் இவர் தூங்க மாட்டாராம், கடை போடவில்லை என்றாலும் மார்க்கெட்டை சென்று பார்த்துவிட்டு வருவாராம். ஒரு நாள் கூட இவர் ஏன் இங்கு கடை வைத்திருக்கும் என்று யோசிக்கும் சூழலே வந்தது கிடையாதாம். கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்குள் நுழையும் போதே நுழைவாயிலில் பருவம்மாளின் கடை இருக்கும்.
மகிழ்ச்சி தரும் மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கில் ஐந்து வருடமாக தள்ளுவண்டியில் பஜ்ஜி போண்டா கடை வைத்து நடத்தி வருபவர் சாவித்திரி இவருக்கு 30 வயதாகும் நிலையில் இவருடைய குடும்பத்தின் வாழ்வாதாரமே இந்த கடை தான், இந்த கடை நடத்தி தான் தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் சாவித்திரி.
இவருக்கும் இந்த கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் உள்ள உறவு மிக அழகானது இவருடைய சொந்த ஊர் கடலூர் ஆனால் இவரது உறவினர்கள் எல்லாம் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். சிறுவயதில் அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வரும்போது இவர்களுக்கு கோயம்பேடு மார்க்கெட் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
கோயம்பேடு மார்க்கெட் வந்தாலே இவர்களுக்கு ஒரு மகழ்ச்சி வந்துவிடுமாம், பிறகு திருமணமாகி சென்னைக்கு வந்தார்கள். தனக்கேனே ஒஐந்து வருடமாக ரு தொழில் ஆரமிக்க வேண்டும் என்று நினைத்ததும். இவர்களுக்கு மார்க்கெட் தான் நினைவுக்கு வந்திருக்கிறது. பின்னர் இவர் தனக்கு நன்றாக தெரிந்த சமையலை வைத்து பஜ்ஜி போண்டா கடை அமைத்து ஐந்து வருடமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சொந்தங்களை கொடுத்த மார்க்கெட்
இவர் கோயம்பேடு சந்தையில் தள்ளுவண்டியில் உணவு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரது குடும்பத்திற்கு ஒரே வாழ்வாதாரம் இந்த கடை மட்டும் தான், இவருக்கு இரண்டு பெண்குழந்தை உள்ள நிலையில் மூத்த மகள் 8 ஆம் வகுப்பும் இளைய மகள் 7ஆம் வகுப்பும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த கடையில் வரும் வருமானத்தை வைத்து மட்டுமே பிள்ளைகளை படிக்க படிக்க வைத்து வருகிறார். அம்மு இருந்தாலும் ஒரு சாப்பாட்டை 40 ரூபாய்க்கு மேல் விற்றது கிடையாது. இவரது கடையில் சாப்பாட்டுடன் மீனும் முட்டையும் சேர்த்து தருகிறார்.
உணவு 40 ரூபாய்க்கு கொடுத்தாலும் தரத்திலும் சுவையிலும் நன்றாகவே இருக்கும். என்றும் தனக்கென சொந்தம் இல்லை என்று கவலைப்படும் அம்முவை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறோம் என்கிறார்கள். பக்கத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளும், வேலை செய்யும் தொழிலாளர்கள்.
ஆசிரியரான மார்க்கெட்
முத்து மாரி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த வாழைப்பழம் கடை வைத்து நடத்தி வருகிறார்.கிட்டத்தட்ட 10 வருடமாக கடை நடத்தி வரும் இருக்கு வாழ்க்கையில் ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தது இந்த கடை தான் என்கிறார்.
தனக்கு இந்த உலகத்திலே மிகவும் பிடித்தது தனது மகன்தான் என்று சொன்ன முத்துமாரிக்கு மகனுக்கு அடுத்து அவர் நேசிக்கும் ஒன்று இந்த மார்க்கெட் தான் என்கிறார். ஏனெனில் தனக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும், எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்று ஒரு தாய் போல இந்த மார்க்கெட் தான் கற்றுக்கொடுத்தது என்று நெகிழ்ச்சியாக சொல்கிறார்.
பாதுகாப்பை கொடுக்கும் மார்க்கெட்
இவர்கள் எல்லாம் பகிர்ந்து கொண்டதில் ஒரு ஆச்சரியமான தகவல். இது வரையில் ஒருநாளும் இவர்களுக்கு இந்த மார்க்கெட் பாதுகாப்பற்ற சுழலை கொடுத்ததே இல்லை என்பதுதான்.மேலும் இந்த மார்க்கெட்டை இவர்கள் அனைவரும் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடமாக கருதுகிறார்கள்.
தனியொரு பெண்மணிகளாக இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்துவது அதனை எளிதல்ல ஆனால் அதை எல்லாம் தாண்டி பல வருடங்களாக தங்களின் உழைப்பை நம்பி கடை நடத்தி வருகிறார்கள் இந்த சிங்க பெண்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்