

மாலை முரசுவின் "நெற்றிக்கண்" நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் கோடீஸ்வரன் மற்றும் நெறியாளர் தம்பி தமிழரசன் ஆகியோர் இடையே நடந்த விவாதம் இங்கே,
நெறியாளர் தம்பி தமிழரசன்: திரு. கோடீஸ்வரன், எப்படிப் பார்க்கிறீங்க? அமித் ஷாவினுடைய சூளுரையை எப்படிப் புரிஞ்சுக்கலாம்?
கோடீஸ்வரன்: அமித் ஷாவோட சூழ்நிலை அப்படின்றதை விட, நான் ஒரு பத்திரிகையாளரா ஏதோ வருவாரு, நாலு அஞ்சு ரைடு நடக்கும், கைது எல்லாம் நடக்கும்னு பார்த்தேன். ஏன்னா ஊழலைப் பற்றி ரொம்ப நாள் பேசிப் பேசித் தேஞ்சு போன டேப் மாதிரி இருக்கு. ஆனா இன்னைக்கு விவாதமே பாருங்க, நம்ம புதுசா எதுவுமே பேசல. தமிழ்நாடு எவ்வளவு சீரழிஞ்சுட்டு போயிட்டு இருக்குன்னு பேசுறோம், இல்லன்னா தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்தோட கம்பேர் பண்ணி நல்லா இருக்குன்னு பேசுறோம்.
இன்னைக்கு அமித் ஷா வந்து என்ன ஒரு விஷயம் மேம்பட்டுருக்கு? அரசியல் ரீதியா இன்னைக்கு மிகப்பெரிய பிரச்சனை 'என்.டி.ஏ' (NDA) என்கிறார். தமிழகத்துல என்.டி.ஏ-ன்னா யாரு இருக்கா? ரெண்டே பேர்தான் - ஒண்ணு அண்ணா திமுக, இன்னொன்னு பிஜேபி. இந்த கூட்டணியில யாரு வரா யாரு போறாங்கன்னே தெரியல. அவர் பெரிய வியூக வகுப்பாளர், பல மாநிலங்கள்ல ஜெயிச்சிருக்கலாம், அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா தமிழ்நாடுன்னு வரும்போது மோடி தலைமையில ஆட்சி அப்படின்னா நீங்க தேர்தலே வேணாம்னு அப்படியே தூக்கி திமுக கையில் கொடுத்திடலாம். அண்ணா திமுக கூட்டணின்னு பேசினீங்கன்னா தப்பிக்கும். ஏன்னா இங்க போட்டி என்பது பல வருஷமா ரெண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் இருக்கு.
தம்பி தமிழரசன்: இப்ப பிஜேபியை முன்னிறுத்துனா அது பின்னடைவுன்னு சொல்ல வர்றீங்களா?
கோடீஸ்வரன்: 200% பின்னடைவு. அமித் ஷா ஒரு கணக்கு சொல்றாரு - 'நாங்க தனித்தனியா இருந்ததுனாலதான் தோத்தோம்'னு. அப்போ அண்ணாமலையை காதைத் திருகிப் பிடிச்சு, 'நீ பண்ண வேலைதான் இது'ன்னு சொல்லணும். அண்ணாவைப் பற்றி எதுக்கு பேசுன? ஜெயலலிதா ஊழலைப் பற்றி எதுக்கு பேசுன? டிஎம்கே ஃபைல்ஸ் ரிலீஸ் பண்ணிட்டு அமைதியா இருக்க வேண்டியதுதானே? கூட்டணிக்குள்ளேயே சிண்டுமுடியும் வேலை செஞ்சாங்க.
இப்போ மக்களுக்குப் போக வேண்டிய நேரத்துல, இதே தேஞ்சு போன டேப் மாதிரி நாலரை வருஷமா பேசிட்டு இருக்கோம். எனக்கு ஒரு பத்திரிகையாளரா இது போர் அடிக்குது. சொத்து வரி ஏத்தி இருக்காங்க, கரண்ட் பில் ஏத்தி இருக்காங்க, அதைப்பற்றிப் பேசுங்க. தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலம். இதை வட இந்தியாவோட கம்பேர் பண்றதுல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்லை. அண்ணா அன்னைக்கே சொல்லிட்டாரு, தமிழ்நாடு போட்டியிட வேண்டியது ஜப்பான் கூடவும் ஜெர்மனி கூடவும் தான்.
தம்பி தமிழரசன்: அமித் ஷா வந்திருக்காரே, அவர் என்ன பண்ணுவாருன்னு நினைக்கிறீங்க?
கோடீஸ்வரன்: அமித் ஷா வந்து கோயில் குளம் சுத்திட்டு இருக்காம, சீக்கிரம் கூட்டணி விஷயத்தை முடிக்கணும். பிஜேபி தமிழகத்துல எத்தனை எம்.எல்.ஏ தொகுதியில ஜெயிப்பாங்க? போன வாட்டி நாலு, அதை மூணால பெருக்குனா 12 - 16 சீட்டை வச்சுக்கிட்டு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துருவீங்களா? திராவிட கட்சிகள் தேசிய கட்சிகளை விடச் சிறந்தவை. ஊழல் நடக்குதுன்னு 12 வருஷமா சொல்றாரு அமித் ஷா, நடவடிக்கை எங்கே? ஒரு ரெண்டு அமைச்சரையாவது உள்ள பிடிச்சுப் போட்டிருக்கணும் இல்ல? மலிவான அரசியல் பண்ணாம நடவடிக்கை எடுங்க.
தம்பி தமிழரசன்: ஈடி (ED) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வர்றதா சொல்றாங்களே?
கோடீஸ்வரன்: நடவடிக்கைன்னா ஒரு தீர்ப்பு வரணும். ஈடி வருது, சிபிஐ வருதுன்னு பயம் காட்டுற அரசியல் தான் நடக்குது. செந்தில் பாலாஜி ஜாலியா வெளிய சுத்திக்கிட்டு இருக்காரு. கூட்டணி ஆட்சி வரணுமாங்கிறதை மக்கள் தான் முடிவு பண்ணுவாங்க. நான் ஒண்ணு சொல்றேன், தூக்கத்துல கூட அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்க மாட்டாங்க - அறிவாலயத்திலயும் சரி, அவ்வை சண்முகம் சாலையிலயும் சரி. ஏன்னா அவங்களுக்குக் கொடுத்தே பழக்கம் இல்லை.
நீட் தேர்வு, ஜிஎஸ்டி இதையெல்லாம் கொண்டு வந்தது யாரு? மத்திய அரசுதானே. விலைவாசி ஏற காரணமும் மத்திய அரசுதான். அதானிக்கும் அம்பானிக்கும் தூக்கிக் கொடுக்குற உங்க தேசியக் கொள்கை இங்க எடுபடாது. அதனாலதான் மக்கள் இதுக்கு வழிவிட மாட்டாங்க என்பது என் புரிதல்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.