' உத்திரட்டாதி சனி பெயர்ச்சி' - உழைப்புக்கேற்ற ஊதியம் வாங்க போகும் மேஷ ராசி!

சனிபகவான் சுயசாரம் பெரும்போது தான் தன்னுடைய சுயரூபத்தை எப்பொழுதும் காட்டுவார்...
' உத்திரட்டாதி சனி பெயர்ச்சி' - உழைப்புக்கேற்ற ஊதியம் வாங்க போகும் மேஷ ராசி!
Published on
Updated on
2 min read

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்களில் அமர்ந்திருக்கிறார்... இப்படியான சூழ்நிலையில் குருவினுடைய நட்சத்திரமான போராட்டதியில் இதுவரை சனி பகவான் பயணித்துக் கொண்டிருந்தார் தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்.... கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் பயணிக்கும் இந்த காலத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடைபெறப்போகிறது என்பதை பார்க்கலாம்... பொதுவாக ராசிகளில் இருந்து கிரகங்கள் என்ன வேலை செய்கிறது என்பதை பற்றி அதிகமாக பார்த்திருப்போம்.... ஆனால் நாம் பார்க்க தவறுவது ராசிகளுக்குள் இருக்கின்ற நட்சத்திரங்களில் அமரும்போது கிரகங்கள் என்ன செய்யும் என்பதை பற்றி... எடுத்துக்காட்டாக மேஷ ராசிக்கு 12 ஆம் வீடான மீன ராசியில் சனி பகவான் அமர்வதை பற்றி நாம் பேசுவோம் ஆனால் சனி பகவான் இதனால் வரை. 12ஆம் வீட்டில் அமர்ந்து 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு நட்சத்திரத்தில் அமர்ந்து பலன் செய்திருப்பார்.. தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானதற்கு பின்பாக அவர் 10 மற்றும் 12ஆம் வீட்டு அதிபதியான சனி பகவானின் சொந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் இந்த காலகட்டத்தில் வேறு மாதிரியான நல்ல பலன்களை தற்போது எதிர்பார்க்கலாம்... சனிபகவான் சுயசாரம் பெரும்போது தான் தன்னுடைய சுயரூபத்தை எப்பொழுதும் காட்டுவார்.... அப்படி உத்திரட்டாதியில் இருந்து சனி பகவான் செய்யப் போகும் விளையாட்டை பற்றி பார்ப்போமா?

மேஷ ராசிக்கு தொழில் அமைத்துக் கொடுப்பவர் மகர ராசியின் வீட்டு அதிபதியான சனி பகவான் தான்.... அதேபோல நீங்கள் செய்யும் தொழிலுக்கு லாபத்தை கொடுக்கப் போகிறவரும் கும்ப ராசிக்கு அதிபதியான சனி பகவான் தான்.... ட்டையா தொழிலில் பெரிய சுணக்கம் கண்டவர்கள்... தற்பொழுது அதிலிருந்து விடுதலை அடைந்து நல்ல தொழில் அமைப்பை இப்பொழுது இருந்து பெற ஆரம்பிக்கப் போகிறார்கள்... அவர்களுக்கு என்று கிடைத்த தொழிலுக்கு அதிகபடியான லாபத்தையும் பெறுவார்கள்....

புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்... போக்குவரத்து துறை, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், மெக்கானிக்கல், வண்டி வாகனம் பழுது பார்ப்போர், வாகனத்தின் உதிரிபாக கம்பெனியில் வேலை செய்வோர், மருத்துவ உபகரணங்களை செய்வோம், நாடு விட்டு நாடு சென்று வேலை செய்வதற்கெல்லாம் இது சிறப்பான காலகட்டம் தான்... எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையினருக்கு அற்புதமான காலம்... உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருந்து சில சிரமங்களை கொடுத்தாலும் கூட... எதிர்காலத்தில் செய்யப் போகும் நல்ல திட்டத்தின் மூலம் உங்களைப் பயனடைய செய்வார்... புதிய மாற்றங்களை உருவாக்கும் காலகட்டம்... உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நான்கு பாதத்தில் அமர்ந்திருக்கும் சனி பகவானின் நவாம்ச சஞ்சாரமும் மிக முக்கியமானது... உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் சனி பகவான் பயணிக்கும் போது நவாம்சத்தில் சிம்ம ராசியில் அமர்ந்திருப்பார்...

உயர் பதவிகளில் இருப்போருக்கு சிறப்பான காலகட்டம்... பிரமோஷன் வேண்டி காத்திருப்போருக்கும் இது ஏற்றமான நிலையை உருவாக்கும்... மற்றவர்களிடத்தில் இருந்து உங்களை தனித்து வேறுபடுத்தி காட்ட நன்றாக உழைத்தீர்கள் ஆனால் அதற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்... குருபகவான் உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார்... சனிபகவானும் 10 மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சாரம் வாங்கி 12 இல் அமர்ந்திருக்கிறார்... மிகக் கடுமையாக தூக்கம் கூட இல்லாமல் உழைக்க வேண்டும் என்பதுதான் இதனுடைய தார்ப்பரியம்... சனிக்கிழமை இது ஒரு மறவாமல் சனி பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வாருங்கள்.. பெரிய மாற்றத்தை அடைவீர்கள்... குறிப்பாக கடன்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட சொர்ண ஆகாஷ்ன பைரவரை வழிபடுங்கள்.... வேர்வை வரும் அளவிற்கு உழைத்தால் வங்கியில் சேமிப்பு உயரும்... லட்சுமி கடாட்சத்தோடு தாயார் மகாலட்சுமியையும் வெள்ளிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள்... ஒவ்வொரு மேஷ ராசியினருக்கும் தனஸ்தான அதிபதி சுக்கிரன் எங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு கணக்காளராக இருக்கிறார்... சனி பகவானின் பார்வை 3 /7 பத்தாம் வீடுகளில் பதிவாகிறது... பன்னிரண்டாம் வீட்டிலிருந்து மூன்றாம் பார்வையாக தனஸ்தானத்தை பார்வையிடுகிறார்... ட்ரான்ஸ்போர்ட் தொழில் இருப்பவர்களுக்கு இது ஒரு அபரிவிதமான காலகட்டம்... கலைத்துறையினர் படிப்படியாக அவருடைய தசை புத்திக்கு ஏற்றார் போல் வளர்ச்சி அடைவார்கள்... எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும்..

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com