அதிகமா கடன் இருக்கா? இத செஞ்சு பாருங்க..!!!

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் ஜோதிட உலகில் மிகவும் பிரபலமானது
Do you have a lot of debt
Do you have a lot of debt
Published on
Updated on
2 min read

அன்பார்ந்த மாலைமுரசு வாசகர்களே கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் ஜோதிட உலகில் மிகவும் பிரபலமானது.... யாருக்குமே பயப்படாத ராவணன் கடன் வாங்கியவர் மனம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக இராவணன் கலங்கிய பொழுது கடன் வாங்கியவர் போல கலங்கினார் என்று உதாரணத்திற்கு கூறுவார்கள்...

அப்படியாக பண தேவைகள் என்பது நம் அனைவருக்கும் இன்று அதிகமாக உள்ளது... அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்குகிறோம்.. சுப நிகழ்ச்சிக்காக வாங்குகிறோம்... உடனடி தேவைக்காக வாங்குவது போன்று பண தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.. ஏற்கனவே தாய் தந்தை சேமித்து வைத்திருக்கிறார்கள் அல்லது சொத்து இருக்கிறது மாதம் பணம் ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால் அதிகமாக பொருளாதார தேவைகள் இருக்கும் பொழுது எப்படி நம்முடைய வரவுக்கு ஏற்றார் போல் செலவு அமையும் என்பதுதான் உண்மை...

கடன் சுமையை குறைப்பதற்கு பல பரிகாரங்கள் மூல நூல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன... அதிலும் குறிப்பாக சொர்ண ஆகர்ஷண பைரவர்... இவர் பைரவ வடிவங்களில் ஒரு பிரதானமான செல்வத்தை தரக்கூடிய வடிவம்... இவரை மனதார வழிபட்டு வரும் பொழுது நம்முடைய கடன்கள் தீரும் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன... கால பைரவர் என்று சொன்னாலே முக்காலமும் உணர்ந்தவர் நம்முடைய தேவைகள் என்ன? அதற்கான தீர்வு எங்கு இருக்கிறது? சரியான நேரத்தில் நமக்கு பணம் கிடைக்கிறதா என்பது தான் நாம் புண்ணியம் செய்தோமா அல்லது பாவம் செய்தோமா என்பதை தீர்மானிக்கும் இடம்...

உங்கள் வீட்டில் ஒரு சுப காரியம் உடனடியாக பணம் தேவைப்படுகிறது அந்த நேரத்தில் அந்தக் காலத்தில் உங்களுக்கு யாராவது உதவ முன் வந்தாலோ அல்லது பணம் கிடைப்பதற்கான வழிவகைகள் திறந்தாலும் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் காலபைரவரின் அருள் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம்...

அப்படி இல்லாவிடில் நிச்சயமாக நீங்கள் பைரவ வழிபாட்டை அதுவும் பொருளாதாரத்திற்கென்று பணங்களை பொருளாதாரத்தை வாரி வழங்கும் காலபைரவரை வழிபடுவது சாலச்சிறந்தது... பைரவர் ஸ்தலங்கள் தமிழ்நாடு முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் உள்ளது... பைரவரின் வாகனமாக நாய்கள் நம்மிடையே இருக்கின்றன...

நாய்களுக்கு உணவளித்து அதன் மூலம் பரிகாரத்தை நீங்கள் தேடிக் கொள்ளலாம்... தெருகளில் அதிகப்படியான நாய்கள் சுற்றி தெரியும்... அப்படி தெரியும் நாய்களுக்கு உணவளிப்பதன் மூலம் உங்களுடைய கஷ்டங்களையும் பாவங்களையும் நீங்கள் நிவர்த்தி செய்யலாம்.. உண்மையாக நன்றி உள்ள ஜீவனான நாய்களிடத்தில் பதிவு பாசம் காட்டும் பொழுது இந்தக் காலமும் நமக்கு பதிவு பாசம் காட்டி சரியான நேரத்தில் சரியான பொருளாதார அமைப்புகளை உங்களுக்கு கொடுப்பதற்கு தயாராக உள்ளது...

அடுத்தபடியாக அஷ்ட லட்சுமிகளில் தனலட்சுமி:

லட்சுமி வழிபாடு பொதுவாக செல்வத்திற்காக மேற்கொள்ளப்படுவது ஏனென்றால் மகாலட்சுமியே செல்வத்தின் வடிவம் தான்.. அவரிடத்தில் இல்லாத பொருளாதாரமே இல்லை... ஒருவருக்கு லட்சுமி கடாட்சம் வந்து விட்டால் வாழ்க்கையில் அனைத்துமே பிடிபட்டு விடும்... இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தவரே சமுதாயத்தில் உயர்ந்தவராக கருதப்படுகிறார்.. அப்படியானால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பட்டு விட்டால் பிறகு என்ன நீங்கள் சொல்வது தானே சட்டம்... லக்ஷ்மி என்று சொன்னாலே ஒருவர் தான் ஆனால் அவரே எட்டு பரிமாணங்களில் நமக்கு காட்சியளிக்கிறார் கஜலட்சுமி வித்யாலக்ஷ்மி சந்தான லட்சுமி பாக்கியலட்சுமி இப்படியாக நமக்கு பொருளாதாரத்திற்கென்று தனலட்சுமி ஒரு தீர்வாக அமையும்...

அஷ்ட லட்சுமிக்கு என்று தனியாக கோவில்களும் சன்னிதிகளும் உள்ளது... அப்படி உங்களுக்கு தென்படவில்லை என்றால் மகாவிஷ்ணுடன் இருக்கக்கூடிய மகாலட்சுமி சன்னதிக்கு நீங்கள் செல்லலாம்... பெருந்தேவி தாயார் தரிசனமும் மகாலட்சுமியும் தரிசனமும் ஒன்றுதான்... தனலட்சுமிக்கு எவ்வாறு நாம் பூஜை செய்வது தாமரை மலர் அவருக்கு மிகவும் பிடித்தமானது தாமரை மலர்கள் வைத்து அவருக்கு வழிபடலாம் அல்லது காலையில் எழுந்து சுத்தமாக வீட்டை துடைத்து குளித்துவிட்டு நறுமண பொருட்கள் ஊதுபத்தி நறுமணப் புகை தரக்கூடிய பொருட்களை பயன்படுத்தி நீங்கள் தனலட்சுமி வழிபடலாம்... அவரவர் பிறந்த ஜாதகத்தில் இந்த காலகட்டங்களில் தனம் வர வேண்டும் என்றும் அப்படி வந்த தனத்தை வைத்து அவருடைய வாழ்க்கையில் பெருகுகிறாரா அல்லது கஷ்டப்படுகிறாரா என்பது அவரவர் கையில் தான் இருக்கிறது... சரியான ஆலோசனை பெற வேண்டும் என்றால் தெய்வத்தின் பாதத்தை தவிர நம்மால் எதுவுமே செய்ய முடியாது...

கடினமாக உழைக்க வேண்டும் என்பது 100 சதவீதம் உண்மை..... அதே போல் தெய்வ நம்பிக்கையும் உங்களுக்கு மேலும் பல சிறப்புகளை கொண்டு வரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை... காலபைரவரின் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்... அதேபோல அஷ்ட லட்சுமி களில் தனலட்சுமி....இவர்கள் இருவரையும் பொருளாதாரத்திற்கென்று தனிப்பட்ட முறையில் நீங்கள் வணங்கி வரும் பொழுது வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கல்களும் இல்லாமல் சிறப்பாக நடத்தலாம் என்பது முன்னோர்கள் எழுதி வைத்த கூற்று... இதற்கென்று நீங்கள் வெளியூருக்கு சென்று தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது இல்லை தெய்வம் என்பது நம் உள்ளே இருக்கிறது கூப்பிட்டால் உடனடியாக ஓடி வந்து விடுவார்... ஆகையால் தளங்களுக்கு சென்று வழிபடுவதும் மிக மிக சிறப்பான பலன்களை கொண்டு வரும்... உடல் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் வீட்டிலேயே அஷ்டலட்சுமிகளின் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது சொர்ண ஆகாஷ்ன பைரவரின் படத்தை வைத்து வழிபடுவது போன்ற சிறப்பான காரியங்களில் ஈடுபட்டால் கடன் நிச்சயமாக அடையும் வாழ்க்கை சிறப்பாகும் வாழ்த்துக்கள்....

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com