தொடர்ந்து கால் வலி இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்வது?

அருகாமையில் இருக்கக்கூடிய கோவில்களில் நவகிரக சந்நிதியில் வீற்றிருக்கும் அவருக்கு விளக்கு போடலாம்...
தொடர்ந்து கால் வலி இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்வது?
virojt/iStock/Getty Images Plus/Getty Images
Published on
Updated on
2 min read

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே வணக்கம் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த அன்பர்களுக்கு கால் வலி என்பது சர்வ சாதாரணமாக வந்துவிடும் அதுவும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பத்து அடி எடுத்து நடந்து செல்ல வேண்டுமென்றாலே கடினமாக இருக்கும்... இப்படியான சூழ்நிலையில் கால் பாதத்தை குறிப்பவர் அவரவர் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவக அதிபதி... தலை உங்களுடைய லக்னம் என்று எடுத்துக் கொண்டால்... பாதம் உங்களுடைய பனிரெண்டாம் பாவகம்... சரி ஜாதகம் தெரிந்தவருக்கு 12 ஆம் பாவகம் எது என்று தெரிய வாய்ப்பில்லை. ஜாதகம் தெரிந்தாலும் 12 ஆம் பாவகம் தெரியும் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை சிலருக்கு ஜாதகமே தெரியாது என்ன செய்வது என்று தெரியாது? இப்படியாக மூன்று நிலைகளில் ஒரே ஒரு பரிகாரத்தை மட்டுமே நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டும்...

எலும்பு சம்பந்தப்பட்ட நோயினால் வலி ஏற்படுகிறது என்றால் அதற்காக செவ்வாய் பகவானை நீங்கள் வழிபடலாம் அதாவது நவகிரகத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் பகவானை செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் 6 முதல் 7 மணி வரை அருகாமையில் இருக்கக்கூடிய கோவில்களில் நவகிரக சந்நிதியில் வீற்றிருக்கும் அவருக்கு விளக்கு போடலாம்... அங்கேயே சன்னதியில் அமர்ந்திருந்து ஒரு பத்து நிமிடம் செவ்வாய் பகவானை நினைத்து தியானத்தில் ஈடுபடலாம்...

தேவதை என்று எடுத்துக் கொண்டால் செவ்வாய்க்கு முருகன் தான்... மலை மீது இருக்கும் முருகப்பெருமான் கடின உழைப்போடு தன்னை வந்து சந்திக்கும் பக்தர்களுக்கு எப்பொழுதும் அருள் புரிய தயாராக இருக்கிறார்... நீங்கள் நவகிரகத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் பகவானை சந்தித்தாலும் நன்மை பயக்கும் அதே போல செவ்வாயின் அதி தேவதையாக இருக்கக்கூடிய முருகப்பெருமானை வணங்கினாலும் காலில் ஏற்படுகின்ற பிரச்சினையிலிருந்து உங்களுக்கு தீர்வு உண்டாகும்...

ஒருவேளை உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய ஜோதிடரிடம் சென்று லக்கினத்திற்கு 12-ம் பாவகத்தில் அமர்ந்திருக்கக் கூடிய கிரகம் யார் என்று கேளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் ஜாதகம் இருந்தால் ஜாதகத்தை எடுத்து லக்னத்தில் இருந்து எண்ணி வர 12 ஆம் வீட்டில் எந்த கிரகம் அமர்ந்திருக்கிறார் என்று பாருங்கள் நவகிரகத்தில் அந்த கிரகத்திற்கு பூஜை செய்து வாருங்கள் உடனடியாக உங்களுக்கு கால் வலி சரியாகிவிடும் ஒருவேளை லக்கினத்தில் இருந்து 12 ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் சிவபெருமானை வணங்கலாம்... செவ்வாய் இருந்தால் முருகப்பெருமானை வணங்கலாம்... புதன் இருந்தால் மகாவிஷ்ணுவை வணங்கலாம்... குரு இருந்தால் குரு தக்ஷிணாமூர்த்தி வழிபடலாம்... சுக்கிரன் இருந்தால் தாயார் மகாலட்சுமியை வழிபடலாம்...

சனி பகவான் இருந்தால் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை வழிபடலாம்... ராகு கேதுக்கள் இருந்தால் அதற்கென்று தனியான சந்ததிகள் அனைத்து கோவில்களிலும் உள்ளது ராகு கேதுக்களை நீங்கள் சென்று வழிபடலாம்... இப்படியாக எந்த கிரகம் லக்கினத்திற்கு 12-ம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறதோ அந்த கிரகத்தின் உடைய வழிபாடு மிகச் சிறப்பாக இருக்கும் அல்லது லக்கினத்திற்கு 12-ம் பாவகமாக எந்த வீடு வருகிறதோ அதன் அதிபதியின் தேவதையையும் நீங்கள் வழிபடலாம் உதாரணத்திற்கு உங்களுடைய லக்னம் சிம்மமாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 12 ஆம் வீடாக கடக ராசி வரும் கடகத்தில் கிரகங்கள் இல்லை என்றாலும் கடக ராசியின் அதிபதியான சந்திரனை நீங்கள் மனதார வழிபட்டு வரலாம்.... அம்மன் வழிபாடும் உங்களுக்கு நிச்சயமாக சந்திரனால் ஏற்படக்கூடிய தோஷத்திலிருந்து விடுதலையை கொடுப்பார்.... இப்படியாக காலில் ஏற்படக்கூடிய வலிக்கும் லக்னத்தில் இருந்து 12 ஆம் பாவத்திற்கும் அதிகப்படியான தொடர்புகள் உள்ளது...

மருத்துவரை சென்று அணுகும் பொழுது அவர்கள் அதிகமாக நடக்காதீர்கள் வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுரை கூறுவார் நிச்சயமாக மருத்துவர் கூறும் அறிவுரைகளை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.. அதையும் தாண்டி ஒரு படி ஆன்மீகத்தில் தெய்வத்தை பிடித்திருக்கும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்க வாய்ப்பு இருக்கிறது...

இயற்கையால் முடியாதது எதுவுமே இல்லை இயற்கையை படைத்த தெய்வத்தால் முடியாதது இந்த உலகத்தில் இல்லை இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை... நாமெல்லாம் தெய்வத்திற்கு முன்பாக ஒரு சிறிய படைப்பு... இந்த படைப்புக்கு தேவையானவற்றை படைத்தவன் நிச்சயமாக செய்தாகத்தான் வேண்டும் அதற்காக அவரை நீங்கள் பற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.... கோவிலுக்கு சாதாரண தேங்காய் எண்ணெயை கொண்டு சென்று முருகப் பெருமானின் பாதத்தில் வைத்து பூஜித்து அதை வீட்டிற்கு கொண்டு வந்து கால் வலி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தேய்த்து வாருங்கள் நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது...

சிலருக்கு முட்டியில் வலி இருக்கும்... சிலருக்கு கால் பாதத்தில் வலி இருக்கும்... சிலருக்கு எலும்பில் வலி இருக்கும்.... சிலருக்கு தொடையில் வலி இருக்கும்... இதற்கான தீர்வாக எம்பெருமான் முருகனை இறுக பற்றி கொண்டு உங்களுக்கான பிரச்சனைகளை அவரிடம் சொல்லி கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் கூறி வாருங்கள்.. அதில் இருக்கக்கூடிய எல்லா பிணியும் நீங்கும் என்ற வார்த்தைக்கு ஏற்ப உங்களுடைய தெய்வத்தின் மன உறுதியை பார்த்து. தெய்வமே உங்களுக்கு விடுதலை கொடுக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.. கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்க முருகப்பெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் அவரை இறுக பற்றி கொண்டு மனதார வழிபடுங்கள் பிரச்சனையிலிருந்து தீர்வு பெறுங்கள்...

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com