

குரு பகவான் கடக ராசியில் உச்ச நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது தற்பொழுது வக்கிரம் என்ற நிலையை அடைந்திருக்கிறார் அதாவது பின்னோக்கி செல்லுதல் என்று அர்த்தம் கடகத்தில் இருந்து பின்னோக்கி மிதுன ராசியை நோக்கி தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார் குரூ.... ஏற்கனவே அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வந்த குரு பகவான் பலரது வாழ்க்கையில் நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறார் குறிப்பாக குருவினுடைய அமைப்பு பொது ஜன வசியம் தான் காரணம் உயிர்களுக்கு எல்லாம் தலைவன் குரு தான் அப்படிப்பட்ட குருபகவான் உச்ச நிலையில் அடையும் பொழுது அனைத்து ராசியினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக உதவிகளை செய்து கொண்டே தான் இருந்திருக்கிறார்..
தற்பொழுது வக்கிரமடையும் குரு பகவான் மிதுன ராசியை நோக்கி பயணிக்கிறார் அப்படி என்றால் அவர் மிதுன ராசியில் இருப்பது போலவே செயல்படுவார் என்பதை எடுத்துக் கொள்ளலாம்... ஏற்கனவே நீங்கள் ஆரம்பித்த வேலை நல்லவிதமாகவோ அல்லது உங்களுக்கு பிடிக்காத வண்ணமோ தற்பொழுது மாறக்கூடும்... காரணம் கடகத்தில் இருந்து குருபகவான் செயல் படுவது போல மிதுனத்தில் இருந்து செயல்பட மாட்டார்... கடக ராசி குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசி காரணம் உணவின் மூலமாக உயிர்கள் வாழ்கின்றன... உயிர்களுக்கு ஆதாரமே குரு கிரகம் தான்... அதனால் தான் உணவின் உறைவிடமான கடகத்தில் கொழுப்புக்கு அதிபதியான குரு பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்... உயிர்களைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கப் போகிறார்...
அனைத்து ராசிக்குமே கடகத்தில் இருக்கும் குரு பகவானின் அருள் ஆசி கிடைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. அப்படிப்பட்ட 6 8 12 போன்ற அசுபஸ்தானங்களுக்கு குரு பகவான் வந்தும் கூட சில ராசிக்கு மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறார்... கடக ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்த குரு பகவான் ராசியை நோக்கி வந்தார்... அந்த சமயத்தில் ஆறாம் பாவமான நோய் எதிரி கடலில் மிகப்பெரிய அளவில் முழுகி தவித்தாலும் கூட ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் கிடைத்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வரத்தான் செய்தார்கள்... இப்படியாக அசுபஸ்தானங்களில் குரு பகவான் அமர்ந்தாலோ பார்த்தாலே கூட நல்ல பலன்களை வாரி வழங்குவதற்கு அவர் தயங்கியதே இல்லை... சரி வாருங்கள் இன்ன பிற ராசிகளுக்கு குரு பகவானின் வக்கிர பலன் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
மேஷ ராசி:
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே இதனால் வரை நான்காம் இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் உங்களுக்கு மூன்றாம் வீட்டில் ஜெயஸ்தானத்தில் பயணிக்கவிருக்கிறார்... முயற்சிகளில் வெற்றி என்ற நிலையை தான் தற்பொழுது தரப்போகிறார்.. பறந்துபட்ட அனுபவங்களை நீங்கள் சேகரிப்பீர்கள்.. மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்ப்பதால் நின்று போன திருமண பேச்சு வார்த்தைகள்.... சுப காரியங்கள்... பங்கு சந்தை லாபம்... திடீர் அதிர்ஷ்டம் தனயோகம் போன்றவை தற்போது தாராளமாக கிடைக்கும்... 12 ஆம் அதிபதி மூன்றாம் வீட்டிலும் ஒன்பதாம் அதிபதி மூன்றாம் வீட்டிலும் இருந்ததால் தர்ம சிந்தனைகள் தற்போது மேலோங்க விற்கிறது...
நீண்ட தூர பிரயணங்களை மேற்கொள்வதன் மூலம் மிகப்பெரிய ஆதாயத்தை நீங்கள் அடைவீர்கள்... கோவில் பக்கமே செல்ல மாட்டேன் என்று இருந்தவர்கள் கூட தற்பொழுது கோவிலுக்கு சென்று பகவானை வழிபடுவதற்கான காலகட்டம்... இடம் மனை வாங்க விற்க இது ஒரு சிறந்த நேரம் தான்... நண்பர்கள் பகைவர்களாகவும் பகைவர்கள் நண்பர்களாகவும் கூட மாறக்கூடும்... நம்மை பற்றி புரிந்து கொள்ளாமல் சிலர் நம்மை விட்டு விலகிச் செல்லலாம் ஆனால் அது நிரந்தரமான விளக்கமாக இல்லாமல் குறுகிய காலமாக இருந்து மீண்டும் உங்களை வந்து சேருவார்கள்... மூன்றாம் வீட்டில் இருந்து பதினோராம் வீட்டை பார்ப்பதால் லாபம் அதிகரிக்கும்... தொழிலில் நல்ல முதலீடு போன்றவை உங்களுக்கு உண்டாகும்...
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே இதனால் வரை முயற்சி ஸ்தானத்தில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்பொழுது வக்கிரநிலையை அடைந்து இரண்டாம் வீட்டில் பயணிக்க வருகிறார்... பணத்தட்டுப்பாடு நீங்கி தாராளமாக பண வரவு மேலோங்கும் காலகட்டம்.. கேட்ட இடத்தில் கடனம் கிடைக்கும் அதே போல உங்களை நம்பி பணத்தையும் கொடுப்பார்கள்... சபையில் பேசி அதன் மூலம் தீர்வு காணக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு... எதையும் நன்மையாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் வளம் பெற எல்லாம் வல்ல தக்ஷிணாமூர்த்தியின் வழிபாடு மிகவும் சிறந்தது... இரண்டாம் வீட்டில் பயணிக்க போகும் அஷ்டமஸ்தானத்தை பார்வையிடுவதால் மனைவியின் மூலமாகவோ அல்லது மனைவியின் குடும்பத்தார் மூலமாக உங்களுக்கு பண வரவுகள் உண்டு... வியாபாரத்தில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்... வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் மருத்துவரை அணுகி அதை பார்த்துக் கொள்வது நல்லது... ரிஷபத்திற்கு இது ஒரு மகிழ்ச்சியான காலகட்டமே...
மிதுன ராசி:
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இதனால் வரை இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் வக்ரம் என்ற நிலையை அடைந்து ராசிக்குள் நுழைய போகிறார்.. பெரிய பாதிப்பு எல்லாம் கிடையாது ஏழாம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி ராசியில் பயணிக்கும் போது விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்... புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் உருவாகும்... ஏற்கனவே பல வேலைகளை தொடங்கி அதன் மூலம் சிக்கல்களையும் கஷ்டங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான சிந்தனை பிறந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற இலக்கு கண்ணில் படும்...
மிதுன ராசி வணங்க வேண்டிய கடவுள் கிருஷ்ண பகவான்...
கடக ராசி:
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே இதனால் வரை ராசியிலேயே பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் சற்று பின்னோக்கி 12ஆம் வீட்டை நோக்கி பயணிக்கிறார்... விரையம் வீண் அலைச்சல் என்று சொல்லுவது உண்டு.... ஆனால் அவையெல்லாம் கடக ராசிக்கு தண்ணீர் பட்ட பாடு தான்... நீங்களே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக பயணித்துக் கொண்டிருப்பீர்கள்... ஓடுகின்ற நதியைப் போன்றவர்கள் என்பதால் உங்களுக்கு விரையம் எல்லாம் அவ்வளவு பெரிய கஷ்டம் கிடையாது...
வாழ்க்கையில் இதைவிட பெரிய விஷயங்கள் எவ்வளவோ சந்தித்து விட்டீர்கள் 12ஆம் வீட்டில் இருக்கும் குரு பகவான் உங்களுடைய நிலையை சற்று இறக்கி காட்டுவார் அதாவது மற்றவர்கள் உங்களை தகுதி குறைவாக நினைப்பதாக உங்களுக்கு தோன்றும் அப்படிப்பட்ட சூழ்நிலையும் உருவாகும்.... ஆனால் அவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்று ஓடிக்கொண்டே இருப்பீர்கள்..... குருவுக்கு மிகவும் பிடித்த வீடான உங்களுடைய வீட்டில் இருந்து அவர் 12 ஆம் வீட்டை நோக்கி பயணிக்கும் இந்த காலகட்டத்தில் கடன்கள் அடையும் அதற்கான வாசல்களும் திறக்கும்.... சக்கரத்தாழ்வார் சென்று சிந்தியுங்கள் வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.