சஷ்டியில் விரதம் இருந்தால்... திருமண தடை அகலும்... குழந்தை பேரு கிடைக்கும்... புதிய வாகனத்தை வாங்குவீர்கள்.. கடன் தொல்லை நீங்கும்... எதிரிகள் அழிவார்கள்.... வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்... நோய்களிலிருந்து விடுதலை.... பொருளாதார வசதி மேம்படும்... பேர் புகழ் கிடைக்கும்... மாளிகை போன்ற வீடு அமையும்.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
அன்பார்ந்த மாலைமுரசு வாசகர்களே சஷ்டி என்றாலே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? முருகப்பெருமானின் கருணை? முருகனுக்கு விரதம் இருந்து மனதார வழிபட்டு வேண்டிய வரங்களை நாம் பெற்றுக் கொள்வோம், பக்தியின் மூலம் முருகப்பெருமானின் அருள் கடாட்சத்தை பெறுவோம்...
தீப்பொறியிலிருந்து வந்த நம் கந்தன், நம்மை தீயில் பொசுக்காமல் பார்த்துக் கொள்வார்... முருகனின் அருளை பெறுவதற்கு பெரிய stunt எல்லாம் செய்ய தேவையில்லை... முருகா என்று கூப்பிட்டாலே போதும் கேட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவார்... அம்மாவாசை முடிந்து 6 நாட்கள் விரதம் இருக்க வருடம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு... கடுமையான விரதத்தை மேற்கொண்டால் மட்டும்தான் அது பலிக்குமா? youtube போன்ற வலைதளங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் உண்ணுங்கள்... தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உணவு ஏதும் அருந்தாதீர்கள்... இப்படி எல்லாம் கூறுகிறார்களே இவ்வளவு கடுமையாக இருந்தால் தான் அது விரதம் ஆகுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்?
முருகனை கந்தன் என்பார் கடம்பன் என்பார்... கார்த்திகேயன் என்பார்... சண்முகன் என்பார்... சரவணன் என்பார்.. ஓடோடி வா குமரா என்பார்... ஆறுமுகம் என்பார்... அனாத ரட்சகன் என்பார்... இப்படி முருகனை எந்த பெயரை வைத்து அழைத்தாலும் அவர் வருவார்... விரதமாக நாம் நாம் இருக்கப் போவது அவரை மட்டும் நினைத்து அவரைப் பற்றி சிந்தித்து அவருடைய அருளாசியை பெறுவது மட்டுமே நமக்கு நோக்கமாக இருக்க வேண்டும்... மற்றபடி உங்களால் முடிகிறது உணவு உண்ணாமல் இருக்க முடிகிறது.. என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு உண்ணாமல் நீங்கள் விரதம் இருக்கலாம்... அதே போல உடல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறீர்கள், அல்லது உடல்நிலை சரியில்லை என்று கூறுபவர்கள் முருகனை பக்தியாய் நினைத்தால் மட்டுமே போதுமானது என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை காலையில் சூரியன் எழுவதற்கு முன்பாகவே அவர்களுடைய விரதத்தை ஆரம்பித்து விடுவார்கள்.. சூரியன் மறைந்த பின்பாக விரதத்தை முடிப்பார்கள்... இப்படியாக கடுமையான விரதத்தை இஸ்லாமியர்கள் மேற்கொண்டாலும் அவர்கள் உடல் தூய்மை மற்றும் மனத்தூய்மை ஆகியவற்றை சேர்த்து விரதத்தை கடவுளுக்காக எடுக்கிறார்கள்.... குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள்.. மலை மேல் ஏறுவதற்கு நல்ல சத்தான உணவு உண்ண வேண்டும்... பாதையில் நடக்கும் பொழுதுenergy வீக்காகி கீழே விழுவோம்... அதுவே மலை என்றால் எவ்வளவு energy தேவைப்படும் உங்களுக்கு... அந்த காலத்தில் மலையேறும் பொழுது நன்றாக உணவு சாப்பிட்டு விட்டு சைவ உணவு எடுத்து பின்னர் மலையேற தொடங்குவார்கள்... இந்த காலத்தில் நவீன யுகத்தில் முருகனுக்காக விரதம் இருந்து தூய்மையான பக்தியோடு அவரை நோக்கி பிரார்த்திக்கும் பொழுது நிச்சயமாக உங்களுடைய கூக்குரலை அவர் கேட்பார்...
காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனுடைய படத்திற்கு முன்பாகவோ முடிந்தவர்கள் கோவிலுக்கோ சென்று கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம்... முருகனுடைய பாடல்களைப் பாடலாம்... எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை நிசப்தமாக அவரை நினைத்து மனதார வணங்கினால் மட்டுமே கூட போதும்... ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வளம் பெற்று இருந்தாலே அவருக்கு ஏற்கனவே முருகப்பெருமானின் அருள் இருக்கிறது என்று அர்த்தம்... செவ்வாய் பலம் இல்லாதவர்கள் தொழில் ரீதியாக செவ்வாயின் காரகத்துவங்களில் ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள்... அப்படியானால் முருகப்பெருமான் கிரகங்களினால் பலமோ அல்லது பலவீனமோ பெற்றால் கூட அவர்களுக்கு துணை நிற்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை....
கந்தா சரணம் கந்தா போற்றி முருகா சரணம் முருகா போற்றி என்று உங்களுக்குத் தெரிந்த அவருடைய நாமத்தை உச்சரித்தாலே போதுமானது... பழங்கள் உண்ணலாமா என்ற கேள்விக்கு உண்ணலாம் வயிறு நிரம்ப உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.. அதாவது எதிலும் எண்ணம் செல்லாமல் முருகப்பெருமானை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு வழிபடுவது என்பதுதான் இதன் தார்பரியம்... ஆறு நாள் விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏராளமாக கிடைத்திருக்கிறது என்று இதற்கு முன்பாக விரதம் இருந்தவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்...
முருகப்பெருமானுக்கு குடும்பம் குடும்பமாக தலைமுறை தலைமுறையாக காவடி எடுப்பார்கள் விரதம் இருப்பார்கள்... அவர்களை கேட்டுப் பார்த்தால் கூட முருகனின் திருவிளையாடல் நமக்குத் தெரியவரும்... குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு சஷ்டி நேரத்தில் விரதம் இருந்தால் பையில் சஷ்டியில் விரதம் இருந்தால் பையில் வரும் என்பார்களே அதே போல சஷ்டியில் விரதம் இருந்தால் கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும் என்பது தான் அதன் பொருள் மிளகு விரதம் என்று கூறுகிறார்களே என்று சிலர் கேட்கிறார்கள் ஒரு நாளைக்கு ஒரு மிளகு இரண்டாவது நாள் இரண்டு மிளகு என்று இருக்கும் அளவிற்கு முருகன் உங்களை விட மாட்டார் அப்படி உடலை வருத்திக்கொண்டு அவருக்கு நீங்கள் செய்வதும் உங்களால் முடியுமா என்பதை யோசித்து ஒரு முறைக்கு இருமுறை மருத்துவரை அணுகி தெரிந்து கொண்டு பின்பு இது போன்ற காரியங்களில் நீங்கள் இறங்கலாம்... ஆனால் என்னை பொருத்தவரை நீங்கள் முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்து அவரை மனதார வணங்கினாலே போதுமானது என்பதுதான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.