

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே வணக்கம்... உங்களுடைய ராசிக்கு 2025 முக்கியமான பெரிய கிரகங்கள் சில சங்கடங்களை கொடுத்தாலும் கூட எப்படியோ ஒரு வகையில் சமாளித்து வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்... வருகின்ற 2026 உங்கள் ராசிக்கு ஜாக்பாட்...
இதனால் வரையில் பத்தாம் இடத்தில் குரு பகவான் பிரவேசித்து வேலையில் குழப்பத்தை கொண்டு வந்திருப்பார் மே மாதம் முடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்து வாழ்க்கை அமோகமாக அமைத்துக் கொள்ள வழி செய்வார்... சொந்தமாக வீடு இல்லை என்று கவலைப்படுகிறீர்களா ஜூன் மாதத்திற்கு பிறகு வீடு அமைந்து விடும்.. நிலங்களை வாங்கி போட வேண்டும் என்று ஆசையோடு பணத்தை சேமித்து வைத்தவர்களுக்கு மே மாத இறுதிக்குப் பிறகு சூப்பர் டைம்....
வாருங்கள் 2026 கிரகங்கள் உங்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்... கேது பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் அமர்ந்து... ஆன்மீக சிந்தனைகளை அவ்வபோது கொடுத்து வந்தாலும் கூட... எது நம் கைவிட்டுப் போய் இருக்கிறது எது நம்மிடம் இருக்கிறது என்ற சிந்தனையை கொடுத்துக் கொண்டே இருப்பார்... என்ன மாதிரியான தவறுகளை நாம் செய்தோம் எந்த தவறுகளை நாம் செய்யக்கூடாது என்ற சிந்தனைகளையும் கொடுப்பார்.... எதிர்காலம் பற்றின பயம் இருந்தாலும் கூட குருபகவானின் பதினோராம் வீட்டு சஞ்சாரம் நல்ல நிம்மதியான தெளிவான முடிவுகளை உங்களை எடுக்க வைக்கும்....
ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்க கூடிய ராகு பகவான் நோய்களிலிருந்து அறுவை சிகிச்சையின் மூலமாகவோ அல்லது மருந்துகளின் மூலமாகவோ உங்களுக்கு தீர்வுகளை கொண்டு வருவார்... உழைப்பதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் பிறகு என்ன ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு நல்ல வேலை அமையும்... தற்போது 2026 முதல் ஆறு மாதத்தில் வேலை சம்பந்தமாக சில தொந்தரவுகள் உங்களுக்கு இருக்கலாம்... அதாவது உயர் அதிகாரியின் பிரஷர்... வேலையில் அதிகப்படியான அழுத்தம்.. வேலை இருக்க கூடிய நண்பர்கள் மூலமாக சில தொந்தரவுகள்.. அல்லது உங்களுக்கே வேலைக்கு வர பிடிக்காத அளவுக்கான சூழ்நிலை.. இப்படி ஏதோ ஒன்று உங்களை ஜனவரி முதல் மே மாத இறுதி வரை அழுத்திக் கொண்டே இருக்கும்... அதற்காக நீங்கள் நான் வேலை மாறலாமா என்று கூட சிந்திப்பீர்கள்...
என்னுடைய கருத்து இந்த காலகட்டத்தில் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு வேலைக்கு செல்ல வேண்டாம்... அப்படியே நல்ல வேலை கிடைத்தால் கூட குடும்பத்தாரோடு ஆலோசித்து முடிவெடுங்கள்... ஒருவேளை உங்களுக்கு தசா புத்தியின் அடிப்படையில் நல்ல வேலை கூட அமையலாம் ஆனால் சட்டென்று முடிவெடுக்காமல் ஒரு மாத தாமதப்படுத்தி பிறகு முடிவெடுங்கள்... சனி பகவானின் ஏழாம் வீட்டு சஞ்சாரம்.. வாழ்க்கைத் துணையின் மூலம் நல்ல அறிவுரைகள் உங்களுக்கு கிடைக்கும்.. அதே சமயம் நீங்கள் மிக வேகமாக செயல்பட்டு சில காரியங்களை முன்னெடுக்கும் பொழுது வாழ்க்கை துணையோ மிக மெதுவாக உங்களுடைய வேகத்திற்கு ஈடு கொடுப்பார்.. அப்பொழுது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையில் சில சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உண்டு... கவலை வேண்டாம் அது நிரந்தரமல்ல...
பொருளாதாரம் முன்னேற்றத்தை பொருத்தவரை அஷ்டமாதிபதி என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் ஜனவரி பாதியில் உச்ச நிலைக்கு அடைகிறார் ஐந்தாம் வீட்டில் உச்ச நிலை அடையும் செவ்வாய் பகவானால் உங்களுக்கு பூர்வீகத்தின் மூலமாக சொத்துக்கள் அதன் மூலமாக பணங்கள் வந்து உங்களுக்கு சேரும்... கடந்த இரண்டரை வருடங்களாக உங்களுக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பது தான் உண்மை... குறிப்பாக ராசியிலேயே கேது பகவான் அமர்ந்திருந்த சமயத்தில் சிக்கல்களையும் போராட்டங்களையும் கொண்டு வந்திருப்பார்... பொது வாழ்க்கையில் மனிதர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு நீங்கள் ஒதுங்கி இருந்திருக்க கூடிய காலகட்டம் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம்....
ஆனால் தற்போது நிலைமையே வேறு... குரு பகவான் உச்ச நிலைக்கு 11 ஆம் வீட்டில் அமரும் பொழுது வியாபாரத்தில் தொழிலில் நீங்கள் சந்திக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்... உங்களைப் பற்றி சுற்றி இருப்பவர்கள் உயர்வாக பேசுவார்கள்..... வேலை தளத்தில் மதிக்கப்படுவீர்கள்... குரு பகவானின் பார்வை சனி பகவான் மீது விடுவதால் ஜூன் மாதத்திற்கு தொடங்கி உங்களுடைய கடன் தொல்லை கஷ்டங்கள் மற்றும் விரயங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்... புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி தவிக்கும் கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கான குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது... மே மாதத்திற்கு பிறகு நல்ல செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும்...
தைரியமாக சில முடிவுகள் எடுப்பதற்கு தயங்கினாலும் கூட இந்த 2026 இல் தைரியம் என்பது உங்களுடைய ரத்தத்தில் ஊறிப் போனது போன்ற நல்ல அமைப்புகள் ஏற்படும்... கேது பகவான் 12 ஆம் வீட்டில் அமர்ந்து தூக்கமின்மையை ஏற்படுத்துவார்... சதா அலைந்து கொண்டே இருந்தீர்கள் என்றால் எப்படி தூக்கம் வரும்... மனமும் சதா ஓடிக்கொண்டே இருந்தால் கண்களுக்கு எப்படி ஓய்வு கிடைக்கும்... அதனால் அதிகப்படியான சிந்தனை விடுத்து நீங்கள் மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்... சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுங்கள்... அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு விடும்....
மற்ற அனைத்து ராசிகளை காட்டிலும் கன்னி ராசிக்கு மிகச் சிறப்பாகவே இந்த 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை வாழ்த்துக்கள் வணக்கம்!!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்