ஐசிசி நடத்தி வரும் டி20 உலகக் கோப்பை தொடர் இம்மாதம் 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி 2 வெற்றிகளை பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
நேற்று நடந்த இலங்கை - நியூசிலாந்து அணிக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்து தொடரை விட்டே வெளியெறியது.
இந்நிலையில், அரையிறுதிக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகள் உள்ளன. இதனை தொடர்ந்து 28ஆம் தேதி நடக்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் பெறும்.
இதற்கு முன்பாக நாளை இலங்கிலாந்து, நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வென்றால் அந்த அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த அணி தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது நியூசிலாந்து அணியின் கைக்கு சென்றுள்ளது.
அரையிறுதியில் இந்த நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், முதலாக இங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்னும் மூன்று அணிகள் மட்டுமே தேர்வாக முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
பிப்ரவரி 22- ம் தேதி நடந்து முடிந்த இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா படுமோசமாக விளையாடி 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கான வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. வாய்ப்பை தக்கவைக்க, அடுத்து வரும் இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் ஒரு வலுவான வெற்றியை பெற வேண்டும். அப்போதுதான் அரையிறுதி போட்டியில் இந்தியா தங்களை உறுதி செய்து கொள்ளமுடியும். இந்தியா அணி அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமெனில் வரும் இரண்டு போட்டிகளில் வலுவான வெற்றியை பெற வேண்டுமென்ற நிலையில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.