அதிசார குரு பெயர்ச்சி 2025 - கன்னி ராசி முதல் தனுசு ராசி வரை...!

பெரிய பெரிய குருமார்களின் அனுக்கிரகம் உங்களிடம் அதிகப்படியாக வந்து சேரும் குறிப்பாக....
zodiac sign
zodiac sign
Published on
Updated on
2 min read

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி என்று யோசிக்க வேண்டாம் வேகமாக குரு பகவான் நகர்ந்து மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார்.. அதுவும் உச்சநிலையை அடைகிறார்... 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக குரு உச்சத்தின் பலன் கிடைக்கும் ஆனால் கன்னி ராசிக்கு மட்டும்தான் மிக அதிகப்படியான லாப ஸ்தானத்தில் அமர்வதால் முழு பலரை உங்களால் அனுபவிக்க முடியும்... கடந்த இரண்டரை வருடங்களாக சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளான கன்னிராசி அன்பர்களே லக்னத்திலேயே ஒன்றரை வருட காலங்கள் கேது அமர்ந்து உங்களை செயல்படாமல் செய்து இருப்பார் அல்லது வெளியில் தெரியாத அளவிற்கு உங்களுக்கான வட்டத்துக்குள் நீங்கள் இருந்திருப்பீர்கள்... தற்பொழுது குரு 11ம் பாவத்தில் உச்சம் அடையும் இந்த காலகட்டத்தில் கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு என்று அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்... குறிப்பாக முதல் திருமணம் வம்பு வழக்கில் சிக்கி அவதிப்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இரண்டாம் திருமணம் தற்பொழுது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்... குழந்தை பேரு இல்லையே என்று ஏங்கித் தவித்த கன்னி ராசி அன்பர்களே இதோ குரு உங்களுக்கு அதிசாரமாக நன்மைகளை வாரி வழங்க வந்திருக்கிறார்... வீட்டில் சுப காரியம் நிகழ்வுகள் நடந்தேறும்... நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்வீர்கள்... நிலம் தொடர்பான சிக்கல்கள் இருந்து தற்போது விடுதலை கிடைக்கும்.... வீடு மாற அல்லது விற்க புதியதாக வீடு கட்ட ஏற்ற நேரம் இது...

 துலாம் ராசி: அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே ஏற்கனவே ஐந்தாம் பாவகத்தில் ராகு ஆக அமர்ந்து சிந்தனையில் பெரிய மாற்றங்களையும்... பெரிய பெரிய திட்டங்களையும் உங்களை சிந்திக்க வைத்திருப்பார் அவை எல்லாமே நிறைவேறுமா என்றால் அது குருவின் கையில் தான் உள்ளது பத்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நிச்சயமாக உங்களுக்கு நல்ல வழியை காண்பிப்பார்... தொழில் ரீதியான பிரச்சினைகள் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்... குரு பத்தாம் வீட்டில் வந்தால் பதவி பறிபோகும் என்று கூறுவார்கள் ஆனால் உச்சம் பெற்ற ஒருவால் உங்களுடைய பதவியை நிச்சயமாக பறிக்க முடியாது... அதைத் தாண்டி உங்களுக்கு புதிய வேலையை அமைத்து தர அவர் தயாராக இருக்கிறார்.... வேலையில் பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக பேப்பர் போட வேண்டும் என்று அவசியம் அல்ல அல்லது அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வர வேண்டும் என்று அவசியம் அல்ல ஒன்றை மாத காலங்கள் குரு பகவான் உச்சநலையில் இருக்கும் பொழுது புதிய நல்ல வேலைகளை உங்களுக்கு காண்பிப்பார் ஆனால் அவைகளை தற்போது எடுத்துக் கொள்ள வேண்டாம் அடுத்த வருடம் ஏப்ரல் மேற்கு பிறகு நீங்கள் வேலை மாறலாம்.... தாயாரின் உடல்நிலை சீராகும்.... அதிகப்படியான கடன் இருந்தால் அவை அடைய வாய்ப்பு உண்டு எப்படி என்றால், புதிய வியாபாரத்தை விரிவு படுத்துவதன் மூலம் பழைய கடன்களை நீங்கள் அடைக்கலாம்...

 விருச்சக ராசி: அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்... பெரிய பெரிய குருமார்களின் அனுக்கிரகம் உங்களிடம் அதிகப்படியாக வந்து சேரும் குறிப்பாக குரு ராகவேந்திரர் சாய்பாபா சித்தர்கள் போன்றோரின் வழிபாடு உங்களுக்கு மிகுந்த ஏற்றத்தை கொண்டு வரும்... உங்களுடைய ஆசான் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் அவரை மனதுடன் வணக்கங்கள் நல்ல வழி உங்களுக்கு பிறக்கும்.... நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லை என்று ஏங்கி தவித்த விருச்சிக ராசி அன்பர்களே ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் வரும் பொழுது தந்தையே மகனாகவும் பிறக்க வாய்ப்புண்டு அல்லது தந்தை வழி தாத்தா கொள்ளு தாத்தா போன்றோர் உங்களுக்கு மகனாக அல்லது மகளாக பிறக்க வாய்ப்புண்டு....

 தனுசு ராசி: அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு வந்திருக்கிறார் அனைவரும் பயமுறுத்துவார்கள் குரு பகவான் என்ன செய்யப் போகிறாரோ என்று ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும் லக்கனாதிபதியே அஷ்டமத்தில் அமரும்போது நீங்கள் இதுவரை தெரிந்து கொள்ளாத பல ரகசியங்களை தெரிந்து கொள்ள போகிறீர்கள்.... அடுத்தவரின் தனம் அதாவது அடுத்தவர் பாக்கெட்டில் இருக்கக்கூடிய பணம் வியாபாரம் மூலமாகவோ தொழில் மூலமாகவோ உங்களை வந்து சேரும்..... நீங்கள் எந்த உழைப்பை போட்டாலும் நம்பி போடுங்கள் அக்டோபர் 18ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் போடுகின்ற அத்தனை உழைப்போம் உங்களுக்கு செல்வமாக மாறும்.... யார் என்ன சொன்னாலும் அவர்களாகவே வந்து உங்களிடத்தில் பணத்தை கொடுத்து விட்டு செல்லுகின்ற அளவுக்கு மிகுந்த சேமிப்பு வங்கியில் உயரும்.... அஷ்டம பாவத்திலிருந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் குடும்ப உரிமை மேம்படும்.... குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த குரு உச்ச காலகட்டத்தில் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் சந்தோஷமாக பொழுதை கழிக்க வாய்ப்புண்டு... உறவினர்களோடு நேரத்தை செலவழிக்கலாம்.... 12 ஆம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட தூர பிரயானங்கள் மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.... உங்களுக்கான புதிய மெத்தைகள், வீடு மாறுதல், இடம் மாறுதல்,  மிக நீண்ட பிராயணத்தின் மூலம் அதிர்ஷ்டம் போன்றவை உங்களுக்கு உருவாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com