

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்களில் அமர்ந்திருக்கிறார்... இப்படியான சூழ்நிலையில் குருவினுடைய நட்சத்திரமான போராட்டதியில் இதுவரை சனி பகவான் பயணித்துக் கொண்டிருந்தார் தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்.... கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் பயணிக்கும் இந்த காலத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடைபெறப்போகிறது என்பதை பார்க்கலாம்... பொதுவாக ராசிகளில் இருந்து கிரகங்கள் என்ன வேலை செய்கிறது என்பதை பற்றி அதிகமாக பார்த்திருப்போம்.... ஆனால் நாம் பார்க்க தவறுவது ராசிகளுக்குள் இருக்கின்ற நட்சத்திரங்களில் அமரும்போது கிரகங்கள் என்ன செய்யும் என்பதை பற்றி... எடுத்துக்காட்டாக மேஷ ராசிக்கு 12 ஆம் வீடான மீன ராசியில் சனி பகவான் அமர்வதை பற்றி நாம் பேசுவோம் ஆனால் சனி பகவான் இதனால் வரை. 12ஆம் வீட்டில் அமர்ந்து 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு நட்சத்திரத்தில் அமர்ந்து பலன் செய்திருப்பார்.. தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானதற்கு பின்பாக அவர் 10 மற்றும் 12ஆம் வீட்டு அதிபதியான சனி பகவானின் சொந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் இந்த காலகட்டத்தில் வேறு மாதிரியான நல்ல பலன்களை தற்போது எதிர்பார்க்கலாம்... சனிபகவான் சுயசாரம் பெரும்போது தான் தன்னுடைய சுயரூபத்தை எப்பொழுதும் காட்டுவார்.... அப்படி உத்திரட்டாதியில் இருந்து சனி பகவான் செய்யப் போகும் விளையாட்டை பற்றி பார்ப்போமா?
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே பொதுவாக ரிஷப ராசிக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனி பகவான் தற்பொழுது அமர்ந்திருக்கிறார்... கடந்த இரண்டு வருடங்களாக அலைச்சல் சிக்கல்களில் சிக்கி தவிந்த உங்களுக்கு தற்பொழுது 2026 ஆரம்பித்ததில் இருந்து ஒரு முன்னேற்றமான பாதை கண்ணுக்கு தென்படும்.... சனி பகவான் இதனால் வரையில் மீன ராசியில் குரு பகவானுடைய நட்சத்திரமான பூரட்டாதியில் பயணித்துக் கொண்டிருந்தார்.. தற்பொழுது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார்... இப்படியாக ரிஷப ராசிக்கு 9 மற்றும் 10 ஆம் வீட்டுக்கு அதிபதியான சனி பகவான் 11ஆம் வீட்டில் பயணிப்பது மிகப்பெரிய லாபம்..
ஏற்கனவே நீங்கள் திட்டம் போட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இருந்த அந்த காலகட்டம் தற்பொழுது சனி பகவானால் உங்களுக்கு நடக்கவிருக்கிறது.. இது மிகைப்படுத்திய வாசகம் அல்ல... ஆனால் ஒரே நாளில் குபேர யோகத்தை கொடுக்க மாட்டார் சனி பகவான் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்... ஏற்கனவே ஆரம்பித்த வேலையை பிசினஸ் வியாபாரம் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து இந்த வருடத்தில் தரப்போகிறார்... போதாத குறைக்கு குருபகவானும் இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் அமர்ந்து உங்களுடைய வருமானத்தை உயர்த்த நல்ல வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்....
9ஆம் அதிபதி பதினோராம் வீட்டில் அமர்வதன் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த அந்த பாக்கியதைகள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்... பத்தாம் அதிபதியும் சனி பகவானாகவே வருவதால் தொழிலில் முன்னேற்றம் லாபம் போன்றவை ஏற்படும்... புதிய காரியங்களில் ஈடுபட்டால் வெற்றி அடைவீர்கள்... மேல் இடத்திலிருந்து நல்ல பொறுப்புகள் உங்களைத் தேடி வரப் போகிறது.... எடுத்து செய்யும் வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்... தந்தையாரின் உடல்நலம் தேறும்.... முன்னேற்றம் ஏற்படும்........ நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் அதன் மூலம் லாபம் கிடைக்கும்.... அலைச்சலால் ஆதாயம் உண்டு...
காரியங்கள் நடைபெறாமல் தாமதமானது மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கலாம் தற்போது அது நீங்கி உங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கப் போகிறது.... கால பைரவரை சென்று வழிபடுங்கள் உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்... சனிக்கிழமை தோறும் கால பைரவருக்கு விளக்கு போட்டு வந்தால் பத்தாம் இடத்தில் இருக்க கூடிய ராகு பகவான் உங்களுக்கு எல்லா வகையான உதவிகளை செய்து வாழ்க்கையில் முன்னேற்றமான பாதைகளுக்கு கொண்டு செல்வார்... அருகில் இருக்கக்கூடிய பெருமாள் சன்னதிக்கு சென்று அவரை மனதார வழிபட்டு கருடனையும் வழிபட்டு வாருங்கள் வழிகள் திறக்கும் வாய்ப்புகள் உருவாகும்.... முடிந்தவரை வாரத்தில் ஒரு முறை யாருக்கேனும் அன்னதானம் செய்ய முயற்சித்துப் பாருங்கள்..... வாழ்க வளமுடன்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.