
ஒருவருடைய ஜாதகத்தில் எவ்வளவு பெரிய துன்பங்கள் இருந்தாலும் அவர்களுடைய குலதெய்வம் நிச்சயமாக அவர்களுக்கு துணை நிற்கும் அவர்களை காப்பாற்றும்... அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ஊரில் இருப்பவர்கள் வேலைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ இடம் பெயர்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள் அப்படி இடம்பெறும் போது அவர்களுடைய சொந்த மண்ணில் இருந்த குலதெய்வத்தை விட்டு விட்டு வெளியூருக்கு செல்வது அங்கேயே வசிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்... இந்த சூழ்நிலையில் ஒரு தலைமுறை இரண்டு தலைமுறைக்கு இப்படியாக அந்த குலதெய்வத்தை நினைவில் வைத்துக் கொண்டு இருப்பார்கள் ஒரு கட்டத்தில் குலதெய்வத்தை மறந்து இஷ்ட தெய்வத்திற்கு மாற ஆரம்பிப்பார்கள் அவர்களுடைய சந்ததியினர் இப்படியான சூழ்நிலையில் குலதெய்வம் மறக்கடிக்கப்படும் பொழுது அவர்களுக்கு பல வழிகளில் பிரச்சனைகள் ஏற்படும்....
முதலில் குலதெய்வ வழிபாடு தடை படும் பொழுது அவர்கள் கை வைப்பது குழந்தை பேரு மற்றும் திருமணத்தில் தான்... மற்ற எல்லா காரியத்தை விட குழந்தை பேரு மிகவும் முக்கியமானது ஒரு உயிர் அதாவது நம்முடைய அடுத்த பிறவி என்று வைத்துக் கொள்ளலாம் அது உருவாவது குல தெய்வத்தின் அனுக்கிரகத்தால் மட்டுமே சாத்தியம்.... அதனால் தான் குலதெய்வத்தையும் குழந்தையையும் ஒரே பாவகத்தில் அதாவது ஐந்தாவது பாவகத்தில் நம் முன்னோர்கள் ஜாதகத்தில் வைத்திருக்கிறார்கள்... குலதெய்வம் மறுக்கப்பட்டால் அல்லது மறைக்கப்பட்டால் என்ன செய்வது நம்முடைய இஷ்ட தெய்வம் எப்படியும் நம்மளை வந்து காப்பாற்றும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அதேபோல இஷ்ட தெய்வத்துக்கும் உங்களுக்கு செய்ய வேண்டும் என்று இருந்தாலும் குல தெய்வத்தின் சப்போர்ட் மிக மிக அவசியம்....
அடுத்ததாக திருமண பேர்... நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் நிச்சயமாக குலதெய்வத்தின் அனுக்கிரகம் தேவைப்படும்... குலதெய்வம் என்பது மனதார அவர்களை வழிபட்டு உங்களுடைய பயணத்தில் கூடவே வரும் ஒரு தெய்வம்... நல்ல திருமண பந்தத்தோடு ஆண் பெண் சேர்ந்து வாழ்வதற்கு குலதெய்வத்தின் அனுக்கிரகம் இன்றியமையாத்ததாக அமைகிறது குலதெய்வத்தின் கோவில் வைத்துதான் அந்த காலங்களில் தாலியை கட்டுவார்கள் இப்பொழுதும் அதே வழக்கம் நீடிக்கிறது.... குல தெய்வத்தின் அனுக்கிரகம் பெற அந்தந்த தெய்வங்களில் ஆலயங்களில் அடுத்தடுத்த சந்ததிகள் திருமணங்களை செய்து கொள்ளும்போது அவர்களுக்கு எந்த சிக்கல்களும் வருவதில்லை அதுவே பெற்றோர் ஊர் விட்டு ஊர் சென்று குல தெய்வங்களை மறந்து அந்த கோவில்களில் திருமணம் செய்யாமல் இஷ்ட தெய்வங்களிலேயே அல்லது மண்டபங்களிலேயே திருமணம் செய்யும்பொழுது திருமண வாழ்க்கை சுபிட்சமாக அமைவதில்லை சிலருக்கு...
இதனால் ஏதோ ஒரு காரணத்திற்கு இருதார யோகம் அவர்களுக்கு அமைந்து விடுகிறது அதிலிருந்து நம்மை காப்பாற்றி விட ஒரே ஒரு வாய்ப்பு தான் உண்டு அதுதான் பிரசன்னம் போடுவது உங்களுக்கு தெரிந்த ஜோதிடர் அருகில் இருந்தால் அவரிடம் சென்று ஒரு பிரசன்னம் கேளுங்கள் குலதெய்வம் யார் என்று அப்படியான நேரத்தில் உங்களுக்கு குலதெய்வம் தன்னை யார் என்று வெளிப்படுத்துவார்... அப்படியும் இல்லாமல் போனால் உங்களுடைய தாத்தா பாட்டி அல்லது ஊரில் சென்று விசாரியுங்கள் உங்களுடைய குலதெய்வம் யார் யாரை வணங்கினார்கள் என்று அவர்களுக்கு தெளிவாக தெரியும்....
குலதெய்வத்தை வழிபட்டால் பொருளாதாரத்தில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதும் ஒரு குறிப்பாக செல்வம் செல்வாக்கோடு முன்னோர்கள் இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஆசி வழங்கிய அதே தெய்வம் உங்களுக்கும் வழிகாட்டியாக வந்து ஆசி வழங்கி உங்களையும் நல்ல செல்வ செல்வாக்கோடு வைத்திருக்கும் என்பது குலதெய்வ வழிபாட்டின் ஒரு கணக்கு...
ஆறு மாதத்திற்கு ஒருமுறை குலதெய்வத்தை சென்று சந்திப்பது வழக்கமாக சிலர், சிலர் வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைத்து குலதெய்வத்துக்கு படையல் வைத்து அவர்களை வழிபட்டு ஊர் திரும்பலாம் இன்னும் சிலர் மாதத்திற்கு ஒருமுறை குல தெய்வத்திற்கு சென்று வழிபட்டு அவருடைய பாதத்தில் அவர்களின் வேண்டுதலை வைக்கலாம் இப்படியான சந்தர்ப்பத்தில் நிச்சயம் குலதெய்வம் உங்களை காக்கும்...
காலம் கடந்து குலதெய்வம் தெரியாமல் போனாலும் ஏதாவது ஒரு வகையில் குலதெய்வம் அவர்கள் உங்களுக்கு வெளிப்படுத்துவார்கள் எப்படி எனில் 48 நாள் தொடர்ந்து நீங்கள் ஒரு மூன்று செங்கல் கர்களை வாங்கி வந்து வீட்டில் வைத்து அதற்கு மஞ்சள் பூசி குங்குமம் தடவி சுற்றி வேப்பிலையை வைத்து மனதார வழிபட்டு 48 நாள் தொடர்ந்து விளக்கு ஏற்றினால் குலதெய்வம் தன்னை யார் என்று உங்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு வகையில் நீங்கள் விளக்கேற்றி விட்டு ஞானத்தில் ஈடுபட்டால் குலதெய்வமே உங்களுக்கு தியானத்தில் வந்து தங்களை வெளிப்படுத்தலாம் அல்லது வேறு ஒருவர் வகையில் அவர்கள் அவர்களை உங்களுக்கு வெளிப்படுத்தலாம்...
இப்படியாக குல தெய்வங்கள் நம் உடனையே இருக்கும் நம்மை சுற்றி இருக்கும்... சிலரின் முன்னோர்கள் வேறு மதத்தை தழுவி குலதெய்வத்தை மறந்து வாழ ஆரம்பிப்பார்கள் அப்படி செல்கின்ற குடும்பங்களில் வருகின்ற குழந்தைகளுக்கு குழந்தை பேரு திருமண தடை போன்ற கஷ்ட காலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி விடுகிறது... இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நிச்சயமாக இஷ்ட தெய்வங்களை நீங்கள் எந்த தெய்வங்களை வணங்குகிறீர்களோ அந்த தெய்வம் மற்றும் உங்களுடைய குலதெய்வம் இரண்டுமே உங்களை காப்பாற்ற எப்பொழுதும் உங்களுடனே இருக்கும்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.