

குரு பகவான் கடக ராசியில் உச்ச நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது தற்பொழுது வக்கிரம் என்ற நிலையை அடைந்திருக்கிறார் அதாவது பின்னோக்கி செல்லுதல் என்று அர்த்தம் கடகத்தில் இருந்து பின்னோக்கி மிதுன ராசியை நோக்கி தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார் குரூ.... ஏற்கனவே அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வந்த குரு பகவான் பலரது வாழ்க்கையில் நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறார் குறிப்பாக குருவினுடைய அமைப்பு பொது ஜன வசியம் தான் காரணம் உயிர்களுக்கு எல்லாம் தலைவன் குரு தான் அப்படிப்பட்ட குருபகவான் உச்ச நிலையில் அடையும் பொழுது அனைத்து ராசியினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக உதவிகளை செய்து கொண்டே தான் இருந்திருக்கிறார்...
தற்பொழுது வக்கிரமடையும் குரு பகவான் மிதுன ராசியை நோக்கி பயணிக்கிறார் அப்படி என்றால் அவர் மிதுன ராசியில் இருப்பது போலவே செயல்படுவார் என்பதை எடுத்துக் கொள்ளலாம்... ஏற்கனவே நீங்கள் ஆரம்பித்த வேலை நல்லவிதமாகவோ அல்லது உங்களுக்கு பிடிக்காத வண்ணமோ தற்பொழுது மாறக்கூடும்... காரணம் கடகத்தில் இருந்து குருபகவான் செயல் படுவது போல மிதுனத்தில் இருந்து செயல்பட மாட்டார்... கடக ராசி குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசி காரணம் உணவின் மூலமாக உயிர்கள் வாழ்கின்றன... உயிர்களுக்கு ஆதாரமே குரு கிரகம் தான்... அதனால் தான் உணவின் உறைவிடமான கடகத்தில் கொழுப்புக்கு அதிபதியான குரு பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்... உயிர்களைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கப் போகிறார்...
அனைத்து ராசிக்குமே கடகத்தில் இருக்கும் குரு பகவானின் அருள் ஆசி கிடைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. அப்படிப்பட்ட 6 8 12 போன்ற அசுபஸ்தானங்களுக்கு குரு பகவான் வந்தும் கூட சில ராசிக்கு மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறார்... கடக ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்த குரு பகவான் ராசியை நோக்கி வந்தார்... அந்த சமயத்தில் ஆறாம் பாவமான நோய் எதிரி கடலில் மிகப்பெரிய அளவில் முழுகி தவித்தாலும் கூட ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் கிடைத்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வரத்தான் செய்தார்கள்... இப்படியாக அசுபஸ்தானங்களில் குரு பகவான் அமர்ந்தாலோ பார்த்தாலே கூட நல்ல பலன்களை வாரி வழங்குவதற்கு அவர் தயங்கியதே இல்லை... சரி வாருங்கள் இன்ன பிற ராசிகளுக்கு குரு பகவானின் வக்கிர பலன் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
சிம்ம ராசி:
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இது நாள் வரை பனிரெண்டாம் வீட்டில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் வக்கிர நிலை அடைந்து 11-ம் வீட்டை நோக்கி பயணிக்கிறார் என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி ஒரு நிலையை அடைய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு 12-ல் குரு பகவான் வந்து அமர்ந்து போட்டியோ போட்டி என்ற நிலையில் மிகப்பெரிய சங்கடங்களை தந்தார் அல்லவா? தற்பொழுது அதற்கெல்லாம் தீர்வாக பதினோராம் வீட்டை நோக்கி பயணிக்கிறார் அதாவது உங்களுக்கு முறைப்படி வரவேண்டிய பணமோ அல்லது பதவியோ அல்லது பெயர் புகழோ. உங்களை வந்தடையும்....
ஜாதகம் பார்க்க வருகிறவர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் பரிகாரம் செய்து முடித்தவுடன் வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்... ஆனால் என்னுடைய கருத்து ஜாதகத்தில் குறிப்பிட்ட தசா புத்தியின் அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கை மாற்றம் எப்பொழுது நடைபெறும் என்று இருக்கிறதோ அப்போதுதான் அவர்களுக்கு நடைபெறும்... அப்படி என்றால் நீங்கள் கோவிலுக்கு செல்வதும் பக்தியாக கடவுளை கும்பிடுவதும் உங்களுக்கு வருகின்ற பிரச்சினையிலிருந்து அவர் உங்களை காப்பாற்றுவார் என்பது எள்ளளவும் சந்தேகப்பட வேண்டாம்... மற்ற அனைத்து ராசியினரை காட்டிலும் சிம்ம ராசிக்கு மிகப்பெரிய பலத்தை உருவாக்கும் அளவிற்கு இந்த வக்கிர பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது...
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே இதோ லாப ஸ்தானத்தில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்பொழுது வக்கிர நிலை அடைந்து பத்தாம் வீட்டில் பயணிக்கிறார்... தற்பொழுதுதான் நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது என்று சிந்திப்பதற்குள் வக்கிர நிலையை அடைந்த குருபகவானால் வேலை மாற்றம் நிச்சயமாக நடைபெற இருக்கிறது... பிரமோஷனுக்கும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் அதற்கு நீங்கள் வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கலாம்.... ஒருவேளை உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் ஒரு முறைக்கு 10 முறை யோசித்து வேலையை மாற்றுவது நல்லது... காரணம் பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்ற வாக்கியமும் உண்டு அதன்படி... ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி உங்களுடைய வேலையை பறிக்க பிரபஞ்சம் திட்டமிடலாம் அதற்காக நீங்கள் இடம் கொடுக்க வேண்டாம்... ஜாதகத்தில் வலிமையான பத்தாம் இடம் இருக்கும் வரை உங்களுடைய வேலையை யாராலும் தொட முடியாது...
சிவபெருமானே பத்தில் குரு வந்த பொழுது வீதிக்கு இறங்கி யாசகம் கேட்கும் அளவிற்கு சென்று விட்டார் என்ற வாசகங்களும் நம்மிடம் இருக்கிறது.. அப்படி என்றால் வேலையை பொறுத்தவரை மிக மிக கவனமாக கையாள வேண்டும் பொறுமையாக இருக்க வேண்டும் யார் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும் கூட கவலைப்படாமல் சகித்துக் கொண்டு போவது நல்லது... நாலாம் வீட்டை குரு பகவான் பார்வை அடைவதால் வீடு வாங்கணும் வண்டியில் நல்ல முன்னேற்றமும் அதன் மூலம் லாபமும் ஏற்படும்...
துலாம் ராசி:
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே இதனால் வரையில் பத்தாம் இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் உங்களுக்கு வக்கிர நிலையை அடைந்து ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் பயணிக்கவிருக்கிறார் தொழிலில் போட்டி பொறாமை தடங்கள் போன்றவற்றை நீங்கள் சந்தித்திருக்கலாம் குறிப்பாக நீங்கள் வளர்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் உங்களுக்கு பின்னால் சிலர் பேசியிருக்கலாம்... அதனால் வேலையில் ஒரு பிடிப்பில்லாமல் கூட நீங்கள் இருந்திருக்கலாம் ஆனால் தற்பொழுது அதனுடைய காலம் மாறிவிட்டது பாக்கியஸ்தானத்தில் குரு பகவான் சென்று அமரும் பொழுது உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனையும் உங்களை வந்து சேரும் குறிப்பாக நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தற்பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கவிருக்கும் அதே சமயத்தில் திருமணத்திற்காகவும் வரனுக்காகவும் காத்திருந்தவர்களுக்கு இது ஒரு ஏற்றமான காலகட்டம் தான் ஆன்மீகத்தில் மனம் செல்லும் தெய்வ அனுக்கிரகம் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டால் அவரே உங்களுக்கு அனைத்து அருளையும் புரிந்து தேவையானவற்றை வழி நடத்துவார்.....
விருச்சக ராசி:
அன்பார்ந்த விருச்சக ராசி அன்பர்களே இதனால் வரையில் பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் பயணித்தார் அல்லவா தற்போது அஷ்டம ஸ்தானத்தில் வரையவிருக்கிறார்.. படபடப்பு கோபம் இயற்கையாகவே வரும் அதை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்... யாரிடமும் பெரிதாக கடினமாக பேசி காரியங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்... வேலைத்தளங்களில் உங்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது அன்பும் அக்கறையும் காட்டுங்கள் பெரிதாக உங்களுக்கு பாதிப்பு வராது.... நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்வதற்கான காலகட்டம்... வெளிநாடு வெளியூர் பயணங்கள் மூலமாக திடீர் அதிர்ஷ்டம் தனயோகம் காத்திருக்கிறது.... குடும்பத்தை விட்டு பிரிந்து வேலைக்காகவோ அல்லது வியாபாரநிமித்தமாகவோ வெளியூர் வெளிநாடு செல்லலாம் அப்படி செல்லும் நபர்களுக்கு இறைவன் துணை என்று வழிநடத்தும் அளவிற்கு அஷ்டமத் சாணத்தில் இருக்கக்கூடிய குரு பகவான். நல்லவற்றை செய்வார்... எட்டாம் இடத்தில் இருந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் தன வரவு சற்று தாராளமாக இருக்கும்.... வீர ஆஞ்சநேயரை வழிபடுவது உங்களுக்கு வாழ்க்கையில் வளங்களை கொண்டு வரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.