நடு மைதானத்தில் நடந்த மோதல்.. உயிரிழந்த 30 வயது வீரர் - கண்ணீரில் கால்பந்து உலகம்!

மைதானத்தின் நடுவில் கீப்பர் மீது டி மிகுவல் மோதினார். இந்த சம்பவத்தால் ஓவோனோ சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார், அதைத் தொடர்ந்து ஆட்டம் கைவிடப்பட்டது.
Accident in the middle of the field.. 30-year-old player passes away - Football world in tears!
நடு மைதானத்தில் நடந்த மோதல்.. உயிரிழந்த 30 வயது வீரர் - கண்ணீரில் கால்பந்து உலகம்!
Published on: 
Updated on: 
1 min read

ஸ்பானிய கால்பந்து வீரர் ஜீசஸ் டே மிகுவல், மைதானத்தில் கோல் கீப்பர் மேலே மோதியாதைத் தொடர்ந்து உயிரிழந்ததாக இரண்டாம் பிரிவு கால்பந்து கிளப் டெனெரிஃப் அறிவித்துள்ளது.

டெனெரிஃப் மற்றும் அண்டோரா கால்பந்து க்ளப்-கள் இடையிலான ஆட்டத்தின் இறுதிபகுதியில், 2-2 என்ற சமநிலையில் இருந்தபோது போட்டி தீவிரமடைந்தது. ​​

பந்தை வெளியேற்றுவதற்காகத் தனது கோலிலிருந்து வேகமாக வெளியே ஓடிவந்தார் கீப்பர் ஜீசஸ் ஓவோனோ. இவர் ஈக்வடோரியல் கினியா நாட்டைச் சேர்ந்த சர்வதேச கோல்கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தின் நடுவில் கீப்பர் மீது டி மிகுவல் மோதினார். இந்த சம்பவத்தால் ஓவோனோ சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார், அதைத் தொடர்ந்து ஆட்டம் கைவிடப்பட்டது.

டி மிகுவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மரணமடைவாதற்கு முன்பு அவரது உடல் நரம்பியல் ரீதியாக மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய் கிழமை காலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

30 வயதிலேயே அவரது உயிர் பிரிந்தது கும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழத்தியிருக்கிறது. பலரும் ஜீசஸ் டி மிகுவேலுக்கு இரங்கல் செய்திகளைத் தெரிவித்து வந்தனர். இறுதி போட்டியில் எதிரணியாக விளையாடிய அண்டோரா க்ளப்பும் இரங்கல் தெரிவித்தது.

ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட், பார்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் உள்ளிட்ட க்ளப்களும் இரங்கலை பதிவிட்டன.

Accident in the middle of the field.. 30-year-old player passes away - Football world in tears!
``ஒரு மேட்ச் கூட ஜெயிக்கலையா?" பாகிஸ்தான் மட்டுமில்லை.. UAE, இங்கிலாந்திடமும் அடி வாங்கிய 'இந்திய அணி'! ஹாங்காங் சிக்ஸெஸில் என்னதான் நடக்குது?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.