ஆண்டுக்கு 2000 கோடி, தனி ஜெட்! தலை சுற்ற வைக்கும் ரொனால்டோவின் ஒப்பந்தம்!

இவரோட வருகை, நெய்மர், கரீம் பென்ஸிமா, என்கோலோ காண்டே மாதிரியான முன்னணி வீரர்களை சவுதி லீக்குக்கு
ஆண்டுக்கு 2000 கோடி, தனி ஜெட்! தலை சுற்ற வைக்கும் ரொனால்டோவின் ஒப்பந்தம்!
Published on
Updated on
2 min read

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக் கிளப்பான அல்-நஸ்ருடன் புதிய இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிச்சிருக்கு.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2023-ல அல்-நஸ்ர் கிளப்பில் சேர்ந்த பிறகு, 2027 வரை தங்கறதுக்கு ஒரு புது இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கார். இந்த ஒப்பந்தம், விளையாட்டு உலகில் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒண்ணா கருதப்படுது. இதோட முக்கிய அம்சங்கள்:

ஆண்டு வருமானம்: ஆண்டுக்கு 178 மில்லியன் பவுண்டு (சுமார் 400 மில்லியன் யூரோ, 2000 கோடி ரூபாய்), இதுல போனஸ் மற்றும் கிளப் பங்குகள் அடங்குது.

சைனிங் போனஸ்: முதல் வருடம் 24.5 மில்லியன் பவுண்டு (சுமார் 250 கோடி ரூபாய்), இரண்டாவது வருடம் 38 மில்லியன் பவுண்டு (சுமார் 390 கோடி ரூபாய்).

தனியார் ஜெட் செலவு: ஆண்டுக்கு 4 மில்லியன் பவுண்டு (சுமார் 40 கோடி ரூபாய்) தனியார் ஜெட் பயணத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கு.

கிளப் பங்கு: அல்-நஸ்ர் கிளப்பில் 15% பங்கு, இது சுமார் 33 மில்லியன் பவுண்டு (சுமார் 340 கோடி ரூபாய்) மதிப்பு கொண்டது.

கூடுதல் சலுகைகள்: 16 பேர் கொண்ட பர்ஸனல் ஸ்டாஃப் (3 டிரைவர்கள், 4 ஹவுஸ்கீப்பர்கள், 2 செஃப்கள், 3 தோட்டக்காரர்கள், 4 செக்யூரிட்டி), இதுக்கு ஆண்டுக்கு 1.4 மில்லியன் பவுண்டு (சுமார் 14 கோடி ரூபாய்) செலவு. மேலும், சவுதி நிறுவனங்களுடன் 60 மில்லியன் பவுண்டு (சுமார் 600 கோடி ரூபாய்) ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள்.

போனஸ்: ஒவ்வொரு கோலுக்கும் 110,000 பவுண்டு (சுமார் 1.1 கோடி ரூபாய்), ஒவ்வொரு அசிஸ்ட்டுக்கும் 55,000 பவுண்டு (சுமார் 55 லட்சம் ரூபாய்). இவை இரண்டாவது வருடம் 20% உயரும்.

ஒப்பந்தத்தின் பின்னணி

2023-ல மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பை விட்டு வெளியேறிய பிறகு, ரொனால்டோ அல்-நஸ்ருடன் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, சவுதி புரோ லீகில் புரட்சியை உருவாக்கினார். இவரோட வருகை, நெய்மர், கரீம் பென்ஸிமா, என்கோலோ காண்டே மாதிரியான முன்னணி வீரர்களை சவுதி லீக்குக்கு வரவைச்சது. ஆனா, அல்-நஸ்ர் இன்னும் லீக் டைட்டில் வெல்லல, 2023-ல அரப் கிளப் சாம்பியன்ஸ் கப் மட்டுமே வென்றிருக்கு. இந்த புது ஒப்பந்தம், ரொனால்டோவின் செல்வாக்கையும், சவுதி லீக்கை உலகளவில் பிரபலப்படுத்தறதுல இவரோட பங்களிப்பையும் காட்டியிருக்கு.

ரொனால்டோ, அல்-நஸ்ருக்கு வந்த பிறகு 111 போட்டிகளில் 99 கோல்கள் அடிச்சு, தொடர்ந்து இரண்டு சீசன்களாக சவுதி புரோ லீக்கில் டாப் ஸ்கோரராக இருக்கார். இவரோட மொத்த கோல் எண்ணிக்கை 938, இன்னும் 62 கோல்கள் அடிச்சா 1000 கோல்கள் என்ற வரலாற்று இலக்கை எட்டிடலாம். ஆனா, வயசு தான் 40 நெருங்கிட்டாப்ல.

இந்த ஒப்பந்தம், ரொனால்டோவை உலகின் மிக அதிக சம்பளம் வாங்குற விளையாட்டு வீரராக மாற்றியிருக்கு.

இத்தனை கோடி கொடுத்தால் அவரு நம்பர்.1-ல இல்லாம வேற யாரு இருப்பாங்க!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com