"ஒரு பேரே வரலாறு" ஜாம்பவான்களையே அலறவிட்ட அணி.. உற்சாக வரவேற்பில் ரசிகர்கள்! காலத்திற்கும் நிலைத்து நிற்கும் காப் வெர்டே

FIFA 2026 போட்டியில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அணியாக காப் வெர்டே அணி இருந்தது.
Cape Verde World Cup journey
Cape Verde World Cup journeyCape Verde World Cup journey
Published on
Updated on
1 min read

மக்கள் தொகையில் மிகக்குறைந்த நாடு, "இந்த நாடு மேப்-பில் இருக்கிறதா?" என்று ஒரே நாளில் தங்களது நாட்டினை ட்ரெண்டிங் டாபிக்-காக மாற்றிய நாட்டின் அணியினர்தான் கேப் வெர்டே. சின்ன நாட்டில் இருந்து பெரிய கனவுகளோடு வந்து FIFA 2026 கால்பந்து உலகக்கோப்பையில் பெரிய ஜாம்பவான் அணிகளான ஸ்பெயின், உருகுவே போன்ற நாடுகளை நிலை குலைய வைத்து போட்டியை டிரா செய்தது.

இதனையடுத்து, உலகக் கோப்பையின் 32-வது சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தங்களின் கனவு பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய கேப் வெர்டே கால்பந்து அணிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களை ஹீரோக்களாக பாவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். வீரர்கள் நாட்டின் தலைநகரான பிரையாவில் தரையிறங்கியபோது, ​​அவர்களை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான கொடி ஏந்திய ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். மேலும், தாயகம் திரும்பும் கொண்டாட்டத்திற்காக அவர்கள் திறந்தவெளி டிரக்கில் கெப்ரா கனெலா கடற்கரைக்குச் சென்றபோது, ​​இன்னும் அதிகமானோர் வீதிகளின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்தனர்.

மேலும், ஜூலை 5 கேப் வெர்டேயின் சுதந்திர தினம் என்பதால், "ஒப்ரிகாடோ! காபோ வெர்டே" (நன்றி) என்று எழுதப்பட்டிருந்த பலகைக்கு முன்னால் அமைக்கப்பட்ட மேடையில், அவர்களின் பயிற்சியாளர் புபிஸ்டாவும் துள்ளலான இசைக்கு நடனமாடியதால், அங்கு ஒரு பண்டிகைக்காலச் சூழலே நிலவியது எனலாம். மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள, சுமார் 500,000 மக்கள்தொகை கொண்ட 10 எரிமலைத் தீவுகளின் தொகுப்பான கேப் வெர்டே, இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடவில்லை. மேலும், இந்த ஆண்டுப் போட்டிக்கு வரும்போது உலகத் தரவரிசையில் 67-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அணியினரை நாட்டின் ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் தொடங்கி தலைநகரின் முக்கிய மாவட்டங்கள் வழியாக அணியை அழைத்துச் சென்றது. அப்போது, ​​திரளான ஆதரவாளர்கள் இசையை இசைத்து ஆரவாரம் செய்து களிப்பில் மகிழ்ந்தனர். மேலும், போட்டியில் இருந்து வெளியேறினாலும், இந்த முறை FIFA 2026 போட்டியில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அணியாக காப் வெர்டே அணி இருந்தது. பெரிய பெரிய அணைகளை கண்டு அஞ்சாத ஆட்டம், ஜாம்பவான்களுக்கு கூட பயம் காட்டிய ஒரு அணி என்றால் வரலாற்றில் இனி எப்போதும் காப் வெர்டே இடம்பெற்றிருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com