``26 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா.." கேப்டன் திலக் வர்மா சதம்.. ஆசிய கோப்பையில் இந்தியா (A) அபாரம்!

இந்திய பவுலர்களில் பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும் வீழத்தியிருந்தனர். இந்திய அணி 306 ரன்கள் வித்தியாசாத்தில் வெற்றி பெற்றது.
India Bowls Out Nepal for 26 After Tilak Varma Century in Asia Cup Rising Stars
``26 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா" திலக் வர்மா அடித்த சதம்.. ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸில் அபாரம்!BCCI
Published on: 
Updated on: 
2 min read

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் (ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்) கடந்த நவம்பர் 19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

ஒருநாள் போட்டித் தொடரான இதில் இளம் மற்றும் வளர்ந்துவரும் வீரர்கள்/அணிகள் பங்கேற்கின்றனர். இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', பாகிஸ்தான் 'ஏ', வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த தொடரில் இந்திய அணிக்கான முதல் போட்டி நேற்று நேபாளம் அணிக்கு எதிராக நடைபெற்றது.

 திலக் வர்மா மற்றும் குமார் குஷாக்ரா
திலக் வர்மா மற்றும் குமார் குஷாக்ரா BCCI

இந்திய அணியில் வைபவ் சூர்யவயன்ஷி, அபிஷேக் சர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா (கேப்டன்), குமார் குஷாக்ரா, ரின்கு சிங், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, விபின்ராஜ் நிகாம், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் ஆகிய ஐபிஎல் நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தனர்.

India Bowls Out Nepal for 26 After Tilak Varma Century in Asia Cup Rising Stars
``விளையாட முடியாத பந்துகளே கிடையாது" 89 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி - கம்பீர் காட்டம்!

முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. வைபவ் சூர்யவயன்ஷி, அபிஷேக் சர்மா, ஆயுஷ் பதோனி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க கேப்டன் திலக் வர்மா மற்றும் குமார் குஷாக்ரா ஆளுக்கொரு சதம் அடித்து அணியை கரை சேர்த்தனர். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 332 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி.

அடுத்ததாக களமிறங்கிய நேபாளம் அணி, போராடும் முனைப்புடன் இருந்தாலும் நேற்றைய நாள் அவர்களுக்கானதாக அமையவில்லை.

பிரின்ஸ் யாதவ்
பிரின்ஸ் யாதவ்

11.3 ஓவரில் வெறும் 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு மோசமான தோல்வியை பதிவு செய்தனர்.

இந்திய பவுலர்களில் பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும், ஷாபாஸ் அகமது ஒரு விக்கெட்டும் வீழத்தியிருந்தனர். இந்திய அணி 306 ரன்கள் வித்தியாசாத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கான இரண்டாவது போட்டி நாளை (21.11.2026) பிற்பகல் 1 மணிக்கு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ளது.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் நேபாளம் அணி 137 ரன்கள் அடித்து இந்திய பேட்ஸ்மேன்களை 45 ரன்களுக்கு சுருட்டியது. இந்த தொடரில் அதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாகவும் இந்த போட்டி பார்க்கப்படுகிறது.

India Bowls Out Nepal for 26 After Tilak Varma Century in Asia Cup Rising Stars
சச்சின், டிராவிட், விராட் கோலி வரிசையில் KL ராகுல்!.. சேனா நாடுகளில் செய்த சம்பவம்.. நியூசிலாந்துக்கு பாடம் புகட்டிய இந்தியா!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.