கிரிக்கெட் உலகமே ஆவலோட காத்துக்கிட்டு இருக்கிற இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை 2026 மேட்ச் நாளை (பிப்.15) கொழும்புல இருக்கிற ஆர். பிரேமதாசா மைதானத்துல நடக்கப்போகுது. ஆனா, இந்த மேட்ச் நடக்குமா இல்லையாங்கிற சந்தேகம் இப்போ எல்லார்கிட்டயும் இருக்கு. ஏன்னா, கொழும்பு வானிலை அறிக்கைப்படி நாளை மழை பெய்யும்னு சொல்லியிருக்காங்க. இதனால மேட்ச் ஒருவேளை மழையால நின்னு போனா என்ன நடக்கும், புள்ளிகள் எப்படி பிரிக்கப்படும்னு ஐசிசி சில முக்கியமான ரூல்ஸை சொல்லியிருக்கு.
முதல்ல வானிலை என்ன சொல்லுதுன்னு பார்ப்போம். பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு பகல் நேரத்துல மழை பெய்ய 65 சதவீதம் வாய்ப்பு இருக்காம். இடி மின்னலோடு செம மழை பெய்யும்னு கணிச்சிருக்காங்க. சரி, நைட்டு மேட்ச் டைம்லயாச்சும் மழை குறையுமான்னு பார்த்தா, அப்போவும் 49 சதவீதத்துல இருந்து 65 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா உள்ளூர் தகவல்கள் சொல்லுது. இதனால மேட்ச் ஆரம்பிக்கிறதுல இருந்தே சிக்கல் நீடிக்கும்னு தெரியுது.
ஐசிசி ரூல்ஸ்படி, ஒரு டி20 மேட்ச்ல ரிசல்ட் கிடைக்கணும்னா ரெண்டு டீமும் குறைஞ்சது 5 ஓவர்களாவது விளையாடி இருக்கணும். ஒருவேளை மழை பெய்ஞ்சுக்கிட்டே இருந்து, அஞ்சு ஓவர் கூட வீச முடியலன்னா அந்த மேட்ச் 'அபான்டன்' (Abandoned) அதாவது ரத்து செய்யப்பட்டதா அறிவிப்பாங்க. அப்படி மேட்ச் ரத்தானா, ரெண்டு டீமுக்கும் தலா ஒரு பாயிண்ட் (Point) பிரிச்சு கொடுத்துடுவாங்க. இது இந்தியா, பாகிஸ்தான் ரெண்டு டீமுக்குமே பெரிய மைனஸ் பாயிண்ட். ஏன்னா குரூப் ஏ-ல அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு இந்த மேட்ச் ரொம்ப முக்கியம்.
இங்க ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த குரூப் ஸ்டேஜ் மேட்சுகளுக்கு 'ரிசர்வ் டே' (Reserve Day) கிடையாது. அதாவது ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ஞ்சு மேட்ச் நின்னு போனா, திங்கட்கிழமை அந்த மேட்ச்சை நடத்த மாட்டாங்க. அரையிறுதிக்கும், பைனலுக்கும் மட்டும்தான் அந்த வசதி இருக்கு. அதனால ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்குதோ அதுதான் முடிவு. ஒருவேளை மேட்ச் நடக்கவே இல்லைன்னா, மைதானத்துக்கு வந்திருக்கிற ரசிகர்களுக்கு டிக்கெட் காசை திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும். இதனால ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.
விளையாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த மேட்ச் நடக்கலன்னா டிஜிட்டல் ஒளிபரப்பு செய்யுற ஜியோ ஸ்டார் (JioStar) நிறுவனத்துக்குத்தான் பல கோடி ரூபாய் நஷ்டம் வரும்னு சொல்றாங்க. ஏன்னா இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்னாலே விளம்பர வருமானம் அள்ளும். மேட்ச் நின்னு போனா அந்த விளம்பரங்கள் வராது, இதனால பெரிய வருமான இழப்பு ஏற்படும். ஐசிசி அதிகாரிகள் லாகூர் வரைக்கும் போய் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை இந்த மேட்ச்ல விளையாட சம்மதிக்க வச்சாங்க. ஆனா இப்போ இயற்கை அவங்களுக்கு சம்மதிக்குமாங்கிறதுதான் பெரிய கேள்வியா இருக்கு.
கொழும்பு மைதானத்துல ஈரப்பதம் அதிகமா இருக்கும், அதோட காத்தும் பலமா வீசும்னு சொல்லப்படுது. இப்போதைக்கு ரசிகர்கள் எல்லாரும் மழைக் கடவுள்கிட்ட 'ப்ளீஸ் கொஞ்ச நேரம் மழை வராம இரு'ன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க. அட்லீஸ்ட் ஒரு 5 ஓவர் மேட்சாவது நடந்தா போதும்ங்கிற நிலைமையிலதான் இப்போ கிரிக்கெட் உலகம் இருக்கு. ஒருவேளை மழை பெய்ஞ்சு மேட்ச் ரத்தானா, அது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாத்தான் அமையும். இந்தியா - பாகிஸ்தான் மோதலைப் பார்க்க கோடி கணக்கான கண்கள் காத்துக்கிட்டு இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம், கொழும்பு வானிலை என்ன செய்யப்போகுதுன்னு!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.