எவ்வளவு அவமானம்.. எவ்வளவு ஏளனம்! ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்.. உங்களுக்கும் வங்கதேச ரசிகர்களுக்கும் என்ன வித்தியாசம்!?

சேப்பாக்கில் மட்டுமில்ல.. அடுத்து சின்னசாமியிலும் நம்மை உதைப்பார்கள். வாங்கித்தான் ஆக வேண்டும். அவர்களும் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா!
எவ்வளவு அவமானம்.. எவ்வளவு ஏளனம்! ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்.. உங்களுக்கும் வங்கதேச ரசிகர்களுக்கும் என்ன வித்தியாசம்!?
Published on
Updated on
2 min read

வாயால் கெட்டவர்கள் என்ற அந்தஸ்து கிரிக்கெட்டில் வங்கதேச வீரர்களிடமும், அந்த அணியின் ரசிகர்களிடமும் மட்டும் இதுவரை இருந்து வந்த நிலையில், தற்போது அதனை வெற்றிகரமாக தட்டிப் பறித்திருக்கிறது சிஎஸ்கே அணியும் அதன் ரசிகர்களும்.

ஆம்! 'எங்களை விட எப்போதும் நீ கீழானவன்' என்ற மனநிலையும், பேச்சும் எப்போது வந்ததோ, அப்போதே சிஎஸ்கே தோல்விப் பாதையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.

நேற்றைய போட்டியில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஆர்சிபி தோற்கடிக்கவில்லை. சென்னை ரசிகர்களின் அகம்பாவமும், அவர்களின் மனநிலையும் தான் தோற்கடித்தது.

பெங்களூரு இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்பது என்ன மிகப்பெரிய தேசியக் குற்றமா? எத்தனை வருடங்களுக்கு அவர்களை இதைச் சொல்லியே அவமானப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்? இப்போது உங்கள் இடத்திலேயே வந்து உங்களை செய்துவிட்டார்களா! இது தேவையா?

ஒருவனை நீ 'அதுக்கு லாயக்கு பட மாட்ட' என்று சொல்லிக் கொண்டே இருந்தால், அதை கேட்டு கேட்டு மனம் நொந்து நொந்து, இனிமேலும் அவமானப்பட ஒன்றுமில்லை என்று ஒரு திமிறி எழுந்து அடிப்பான். அந்த அடியை உங்களால் தாங்கமுடியாது. அதைத் தான் நேற்று பெங்களூரு சென்னைக்கு செய்திருக்கிறது.

விராட் கோலியை அவமானப்படுத்துவது.. அவர்கள் தோனியை அவமானப்படுத்துவது போன்ற தனி மனித தாக்குதல் எனும் அசிங்கத்திற்குள் நாம் செல்ல வேண்டியதில்லை.. அது தனி சேப்டர். ஆனால், இத்தனை வருடங்களாக நீங்கள் அவர்களுக்கு கொடுத்த அவமானம் நேற்று உங்களுக்கு திருப்பி கிடைத்திருக்கிறது. இதுவரை இப்படி ஒரு தோல்வியை ஆர்சிபி சென்னை அணிக்கு கொடுத்ததில்லை.

களத்தில் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் இறங்கும் போதே முகத்திலும் சரி.. செயல்பாட்டிலும் சரி.. அவ்வளவு தன்னம்பிக்கை. 'உங்களை இன்று அடிக்கத் தான் வந்திருக்கிறேன்' என்ற உடல்மொழி அப்பட்டமாக தெரிந்தது.

அப்படியே சிஎஸ்கே அணியை பார்த்தால், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்றோர் 'நானா உன்ன டீம்-ல எடுக்க சொன்னேன்' என்ற பாடி லேங்குவேஜில் விளையாடிக் கொண்டிருக்க, என்னய்யா இது! இது டீமா? எப்போ நீங்க டெவான் கான்வே-யை வெளியே உட்கார வச்சீங்களோ அப்போவே நீங்க தோத்துட்டீங்க. அவர் எவ்வளவு ஒரு பாசிட்டிவிட்டியை டீமுக்குள்ள கொண்டு வருபவர் தெரியுமா? சரி.. மேட்சுக்குள்ள நான் போக விரும்பல.

நல்லா எழுதி வச்சிக்கோங்க சிஎஸ்கே ரசிகர்களே.. நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், எதிராளியை மதிக்க தெரியணும். எதிராளி நம்மிடம் வம்பிழுக்கலாம், நம்மை கேலி, கிண்டல் செய்யலாம். அதுக்காக நாமளும் அதையே திருப்பி செய்யக் கூடாது. ஆர்சிபி ரசிகர்கள், எல்லை மீறி போறாங்க அப்படீன்னா, அவர்களுடைய அறிவு அவ்வளவு தான்.. அவர்கள் கத்துக்கிட்ட இங்கிதம் அவ்வளவு தான், அவர்கள் மேனேஜ்மென்ட் அவர்களை வழிநடத்திய லட்சணம் அவ்வளவு தான். அதற்காக நாம் நமது தரத்தை விட்டு கீழ் இறங்கலாம்? என்றாவது தோனி அப்படி செய்து பார்த்திருக்கோமா? தோனி இத்தனை வருடம் கட்டிக் காத்தது கோப்பைகளை மட்டுமல்ல.. அணியின் மானம், மரியாதை எல்லாத்தையும் தான்.

பெங்களூரு கோப்பைகளை ஜெயிக்காததை வைத்து அவர்களை ரொம்பவே அவமானப்படுத்திவிட்டீர்கள். சேப்பாக்கில் மட்டுமில்ல.. அடுத்து சின்னசாமியிலும் நம்மை உதைப்பார்கள். வாங்கித்தான் ஆக வேண்டும். அவர்களும் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com